2016-17 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ரூ.7,718 கோடி நஷ்டம்: எஸ்பிஐ வங்கி

கடந்த 2016-17 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ரூ.7 ஆயிரத்து 718 கோடி ரூபாய் நிகர நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது. 
2016-17 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ரூ.7,718 கோடி நஷ்டம்: எஸ்பிஐ வங்கி

புதுதில்லி: கடந்த 2016-17 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ரூ.7 ஆயிரத்து 718 கோடி ரூபாய் நிகர நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது. 

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) கடந்த 2016-17 ஆண்டின் நான்காவது காலாண்டு வரவு - செலவுகளை தாக்கல் செய்துள்ளது. ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் வங்கியின் வருவாய் ரூ.68 ஆயிரம் கோடியாக இருந்துள்ளது.

இதே காலாண்டில் வங்கி ரூ.7 ஆயிரத்து 718 கோடி ரூபாய் நிகர நஷ்டத்தை சந்தித்துள்ளது. முந்தைய காலாண்டில் வங்கி ரூ.2 ஆயிரத்து 814 கோடி லாபம் ஈட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

செயலற்ற சொத்துகள் மூலம் அதிக கடன் அளிக்கப்பட்டதால் இந்த நஷ்டத்தை வங்கி சந்தித்துள்ளதாக எஸ்பிஐ தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com