கணவர் தற்கொலை குறித்து நடிகை நந்தினியின் உருக்கமான பேச்சு... ஆடியோ இணைப்பு!

நந்தினியின் கணவர் தற்கொலை விவகாரத்தைச் சுற்றிக் கசியும் செய்திகளைப் பார்த்தால் நந்தினி சின்னத்திரை நாடக பாணியில் ஏமாற்றப்பட்டிருக்கக் கூடவும் வாய்ப்புகள் உண்டு.
கணவர் தற்கொலை குறித்து நடிகை நந்தினியின் உருக்கமான பேச்சு... ஆடியோ இணைப்பு!

விஜய் டி.வி சரவணன் மீனாட்சி தொடரால் பிரபலமான நடிகை நந்தினியின் கணவர் கார்த்திகேயன் குளிர்பானத்தில் விசம் கலந்து அருந்தி தனியார் விடுதி ஒன்றில் தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து அவரது தற்கொலைக்கு நந்தினியின் தந்தை தான் காரணம் என்பதாக செய்திகள் உலவிக் கொண்டிருக்கையில் நந்தினி தனது கணவர் குறித்து பகிர்ந்து கொண்ட சில தகவல்களுடன் ஒரு தன்னிரக்கமான ஆடியோ உரையாடல் ஒன்று யூ டியூபில் இண்டியா கிளிட்ஸ் தளத்தில் வெளிவந்திருக்கிறது. அதில் நந்தினி தனது கணவருக்கு முன்னரே இரு பெண்களுடன் தொடர்பு இருந்ததாக சில செய்தி ஊடகங்களில் கூறப்படுவதாகவும் அதைக் குறித்து இது வரை தனக்கு எதுவுமே தெரியாது எனவும்; தான் அறிந்தது தனது கணவர் கார்த்தியை மட்டுமே எனக் குறிப்பிடுகிறார்.

நந்தினியின் உருக்கமான உரையாடல் இது; 

முன்னரே திருமணம் ஆன ஆண்கள் மனைவிக்கு தெரியாமல் ஒன்றிற்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து கொள்ள முயல்வது சின்னத்திரை நெடுந்தொடர்களைப் பொறுத்தவரை சர்வ சாதாரணமாகி விட்ட இந்நாட்களில் ஏற்கனவே இப்படியான ஒரு கதையில் நடித்த நந்தினிக்கும் அதே விதமான சோகம் நேர்ந்தது தான் பரிதாபம்!

நந்தினி; சரவணன் மீனாட்சி தொடரில் மைனா வாக பிரபலமடைவதற்கு முன்பு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘அழகி’ நெடுந்தொடரில் ரஞ்சனி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்தத் தொடரில் பெற்றோரை இழந்த தமிழ் இலக்கியத்தில் ஆர்வமுள்ள பணக்காரப் பெண்ணாக வருவார். இவரிடமுள்ள பண வசதிக்காக திருமணமாகி மனைவியுடன் வாழும் நபர் ஒருவர் இந்தப்பெண்ணை இலக்கிய ஆர்வத்தைப் பயன்படுத்தி ஆசை வார்த்தை கூறி நடித்து ஏமாற்றி திருமணம் செய்ய முயல்வதாக கதை செல்லும். அந்த நெடுந்தொடர் கதை இன்று நந்தினி வாழ்வில் நிஜமாகி விட்டாற்போல் தான் நம்பவேண்டியதாக இருக்கிறது.

நந்தினியின் கணவர் தற்கொலை விவகாரத்தைச் சுற்றிக் கசியும் செய்திகளைப் பார்த்தால் நந்தினி சின்னத்திரை நாடக பாணியில் ஏமாற்றப்பட்டிருக்கக் கூடவும் வாய்ப்புகள் உண்டு.

Audio courtsy: India Glitz

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com