பாகுபலி 2 ன் தவறுகள் என்னென்ன? பட்டியலிடுகிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன்...

படத்தின் நீளம் மிகவும் குறைவு. வெகு சீக்கிரம் படம் முடிந்து விட்டார் போன்ற உணர்வு. படம் முடியும் போது மீண்டும் 3 மணி நேரம் இந்தப் அப்டம் நீடிக்கக் கூடாதா என ரசிகர்களை ஏங்க வைக்கிறது இந்தப் படம்.
பாகுபலி 2 ன் தவறுகள் என்னென்ன? பட்டியலிடுகிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன்...

முதல் பாகம், இரண்டாம் பாகம் என பாக்ஸ் ஆஃபீஸில் மெகா மாஸ்டர் பிளாஸ்டர் ஹிட் அடித்த பாகுபலி திரைப்படத்தைச் சுற்றி பலவிதமான விமர்சனங்கள் சுழன்று கொண்டிருக்கின்றன. அவற்றில் சில படத்தைப் பற்றி வானளாவப் புகழ் பாடக் கூடிய வகையிலானவை. அந்த வகையில் பிரபல இந்தி இயக்குனர் ராம் கோபால் வர்மா ஆரம்பம் முதலே பாகுபலி படக்குழுவினரை ஆஹா, ஓஹோ எனப் புகழ்ந்து தள்ளிக் கொண்டு தான் இருக்கிறார். தமிழ் இயக்குனர்களிலும் பிரமாண்டத்துக்குப் பெயர் போன இயக்குனர் சங்கர், பாகுபலி குறித்து நல்ல விதமாகவே கிரெடிட் கொடுத்து படக்குழுவினரை வாழ்த்தி இருந்தார்.

பாகுபலி திரைப்படம் குறித்து மிக மோசமாக எதிர்மறையாக விமர்சித்து கருத்து தெரிவித்தவர்களில் முக்கியமானவர் இந்தித் திரைப்பட உலக சினிமா விமரிசகர், நடிகர் மற்றும் தயாரிப்பாளரான கமால் கான் சுருக்கமாக கே.ஆர்.கே. இவரது விமரிசனம் மட்டுமே பாகுபலி ரசிகர்கள் பொங்கி எழுந்து திட்டித் தீர்க்கும் வண்ணம் மிக மோசமானதாக இருந்தது. இவர் படத்தின் நாயகன் பிரபாஸை ஒட்டகம் போலிருக்கும் பிரபாஸின் பின்னால் பாகுபலி வெற்றியைக் கண்டு இந்தி தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் வரிசை கட்டி ஓடினால் அது அவர்களது முட்டாள் தனமாக இருக்கும் எனக் கூறி இருந்தார். இப்படி ஒரு சில கடுமையான விமரிசனங்களைத் தவிர்த்து விட்டால் படத்திற்காக குவிந்து வரும் விமரிசனங்கள் அனைத்துமே ஆரோக்கியமானவையே.

தற்போது ‘நானும் ரவுடி தான்’ இயக்குனர் விக்னேஷ் சிவன் பாகுபலி திரைப்படம் குறித்த தனது விமரிசனங்களைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பாகுபலியின் 5 முக்கியமான தவறுகளை அவர் பட்டியலிட்டிருக்கிறார். அவை என்னவென்று பார்க்கலாமா?

  1.  படத்தின் டிக்கெட் விலை 120 ரூபாய் மட்டும் தான் என்று நிர்ணயித்தது முதல் தவறு. ஆனால் இந்தப் படம் தரும் பிரமாண்டம் மற்றும் அற்புத அனுபவங்களுக்கு நிகராக டிக்கெட் விலை இன்னும் கூடுதலாக இருந்திருக்கலாம். அப்படி இல்லையெனில் டிக்கெட் விற்பனை செய்யுமிடத்தில் ஒரு கலெக்சன் பாக்ஸ் வைத்து விடலாம் அல்லது படத் தயாரிப்பாலரது வங்கிக் கணக்கு எண்ணையாவது தந்து விட்டால் போதும், படம் பார்க்கும் ரசிகர்கள் தங்களது மனத் திருப்திக்கு ஏற்ப தாங்களே இந்தப் படத்திற்கு இன்னும் எவ்வளவு கூடுதலாகத் தரலாம் என முடிவு செய்து கொள்வார்கள்.
  2. படத்தின் நீளம் மிகவும் குறைவு. வெகு சீக்கிரம் படம் முடிந்து விட்டார் போன்ற உணர்வு. படம் முடியும் போது மீண்டும் 3 மணி நேரம் இந்தப் அப்டம் நீடிக்கக் கூடாதா என ரசிகர்களை ஏங்க வைக்கிறது இந்தப் படம்.
  3. படத்தின் மேக்கிங் வீடியோ தெளிவாகவும், பூரணமாகவும் படம் எடுக்கப் பட்ட தன்மை குறித்து விளக்குகிறது. இது பிற இயக்குனர்களை பயத்தில் உறைய வைப்பதோடு அவர்களின் தலைக்கனத்தை உடைத்து தகர்ப்பதாகவும் இருக்கிறது.
  4. இந்தப்படம் இரண்டாம் பாகத்தோடு முடிந்து விட்டது ஏமாற்றமளிக்கிறது. இன்னும் 10 பாகங்கள் வெளி வந்தாலும் படம் முடிவே இல்லாமல் நீண்டு கொண்டே சென்று ரசிகர்களை மகிழ்விக்க மீண்டும் மீண்டும் எடுக்கப் பட்டுக் கொண்டே வேண்டும்.
  5.  மிக நீண்ட காலம் காத்திருந்து இந்திய திரைப்பட உலகில் தனக்கென ஒரு பெஞ்ச் மார்க் ரெகார்டை இந்த திரைப்படம் உருவாக்கி வைத்துள்ளது. இந்த ரெகார்டௌ உடைக்க வேண்டுமெனில் இதைப் போன்ற இன்னொரு படம் வர நாம் வெகு நாட்கள் காத்திருக்க வேண்டியதாக இருக்கும்.

என பாகுபலி திரைப்படத்தின் 5 பிரதான பிழைகளாக இவற்றைப் பட்டியலிட்டிருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன். சிலர் புகழ்வதைப் போல இகழ்வார்கள். ஆனால் இவர் பிழைகள் எனச் சுட்டிக்காட்டியிருப்பவை அனைத்துமே பாகுபலி திரைப்படத்தை இவர் எத்தனை தூரம் ரசித்துப் பார்த்திருக்கிறார் என்று உணர்த்துகின்றன. இந்தப் பிழைகள் அனைத்தும் இயக்குனருக்கு படத்தின் மீது இயல்பாக எழுந்த பெருமித உணர்வை வெளிக்காட்டும் படியாக அமைந்து விட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com