ஆவி வேடத்தில் ஜெனிலியா

2003-இல் "துஜே மேரி கசம்' என்ற ஹிந்திப் படம் மூலம் சினிமாவில் நுழைந்தார் ஜெனிலியா. அதே ஆண்டில் ஷங்கர் இயக்கிய
ஆவி வேடத்தில் ஜெனிலியா

2003-இல் "துஜே மேரி கசம்' என்ற ஹிந்திப் படம் மூலம் சினிமாவில் நுழைந்தார் ஜெனிலியா. அதே ஆண்டில் ஷங்கர் இயக்கிய "பாய்ஸ்' படம் மூலம் தமிழில் அறிமுகமாகி பல முன்னணி ஹீரோக்களுடனும்  தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனப் பல மொழிகளிலும் நடித்தார். 2012-ஆம் ஆண்டு அவரது காதலரும், நடிகருமான ரிதேஷ் தேஷ்முக்குடன் அவருக்குத் திருமணம் ஆனது. அதன் பின் சினிமாவிலிருந்து விலகியிருந்தவர், சல்மான் கான் நடித்த "ஜெய் ஹோ' ஹிந்தி  படத்திலும், தன் கணவர் ரிதேஷ் தேஷ்முக் நடித்த "லாய் பாரி' மராத்தி படத்திலும் சிறப்புத் தோற்றத்தில் நடித்தார். இப்போது மீண்டும் ஒரு படத்தில் நடித்திருக்கிறார். 2003-இல் கெளதம் மேனன் இயக்கத்தில் தமிழில் வெளியான "காக்க காக்க' 2011-இல் இந்தியில் "ஃபோர்ஸ்' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. சூர்யா ரோலில் ஜான் ஆப்ரஹாமும், ஜோதிகா ரோலில் ஜெனிலியாவும் நடித்திருந்தனர். இதன் இரண்டாம் பாகம் தற்போது வெளியாகியுள்ளது. முதல் பாகத்தில் ஜெனிலியா இறப்பது போல படம் முடிந்திருக்கும். அதன் தொடர்ச்சியாக இரண்டாம் பாகத்தில் அவர் ஆவியாக நடித்திருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com