தங்கரதம்

டி.சி. மீடியா மற்றும் வீ கேர் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் "தங்கரதம்.' கதாநாயகனாக வெற்றி நடிக்கிறார்.
தங்கரதம்

டி.சி. மீடியா மற்றும் வீ கேர் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் "தங்கரதம்.' கதாநாயகனாக வெற்றி நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக புதுமுகம் நீரஜா நடிக்கிறார். செüந்தர்ராஜன், ராஜேந்திரன், நரேன், சாமிநாதன் உள்ளிட்டோர் கதையின் பிரதான கதாபாத்திரங்கள் ஏற்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் பாலமுருகன். காதல்தான் களம். ஒட்டன் சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் வேலை செய்து, தன் உழைப்பால் பெரிய நிலைக்கு வந்து விட்ட தனியொரு மனிதனுக்கும், அவனுக்கு தீமைகள் விளைவிக்கும் ஒரு கும்பலுக்குமான தொழில் போட்டிதான் திரைக்கதை. இந்த போட்டி, பொறாமை வாழ்க்கைக்குள் அவனுக்குள் அற்புதம் நிகழ்த்துகிறது ஒரு காதல். அந்த காதலுக்கும், அவனுக்கும் அந்த கும்பலால் நிகழ்ந்தது என்ன? என்பது கதை. பிரத்யேக அனுமதி பெற்று மார்க்கெட் இயங்கும் நேரத்தில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இது தவிர நாகர் கோவில், பழனி உள்ளிட்ட இடங்களிலும் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com