ஒளடதம்

மலையாளப் படவுலகின் பிரபல இயக்குநர் டி.வி.சந்திரனின் உதவியாளர் ரமணி திரைக்கதை-வசனம் எழுதி, தமிழில் இயக்கும் திரைப்படத்திற்கு "ஒளடதம்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ஒளடதம்

மலையாளப் படவுலகின் பிரபல இயக்குநர் டி.வி.சந்திரனின் உதவியாளர் ரமணி திரைக்கதை-வசனம் எழுதி, தமிழில் இயக்கும் திரைப்படத்திற்கு "ஒளடதம்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. முற்றிலும் புதுமுகங்களைக் கொண்டு குறைந்த பட்ஜெட்டில் இப்படம் தயாராகிறது. தஷி இசையமைப்பில் ரஞ்சன் ராவ் ஒளிப்பதிவு செய்கிறார். தயாரிப்பு:பிரபு, இணை தயாரிப்பு:மணிகண்டன். இப்படம் குறித்து, இயக்குநர் ரமணி கூறுகையில், "சர்க்கரை நோயாளிகள் உட்கொள்ளும் மாத்திரைகளில் காலாவதியான ரசாயன பொருள்களை கலப்படம் செய்து, சில மருந்து நிறுவனங்கள் கோடிக்கணக்கில் பணம் குவிக்கின்றன. கலப்பட நீரிழிவு மாத்திரைகளை உட்கொள்ளும் நோயாளிகளுக்கு இதய நோய் மற்றும் சிறுநீரகப் புற்றுநோய் வருவதற்கு கூடுதல் வாய்ப்புள்ளது. இதன் விளைவுகளைப் பற்றியும், சுயநலம் மிக்க பணமுதலைகளின் தலையீட்டினால் இந்த மருந்துகளைத் தடை செய்யமுடியாத நிலை குறித்தும் பல உண்மைகளை தோலுரித்துக் காட்டும் இத்திரைப்படம் பல உண்மைச்சம்பவங்களின் எதிரொலியாகவும், 60 மில்லியன் நீரிழிவு நோயாளிகளின் ஒட்டுமொத்த மனக்குமுறலாகவும், தமிழின் முக்கிய திரைப்படமாகவும் விளங்கும் என்பதில் ஐயமில்லை'' என்கிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com