அமலாபாலுக்கு பதிலாக ஐஸ்வர்யா ராஜேஷ்!

தனுஷ் நடிக்கும் "வட சென்னை' படத்தில் அமலாபாலுக்கு பதிலாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அமலாபாலுக்கு பதிலாக ஐஸ்வர்யா ராஜேஷ்!

தனுஷ் நடிக்கும் "வட சென்னை' படத்தில் அமலாபாலுக்கு பதிலாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. "விசாரணை' படத்தைத் தொடர்ந்து "வட சென்னை' படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். இதில் தனுஷ் ஜோடியாக சமந்தா நடிப்பதாக இருந்தது. காரணம் எதுவும் சொல்லாமல் விலகினார் சமந்தா. இதையடுத்து அமலாபாலின் பெயரை பரிந்துரை செய்தார் தனுஷ். இதை ஏற்றுக் கொண்ட வெற்றிமாறன், அமலாபாலை ஒப்பந்தம் செய்தார். தற்போது அமலாபாலும் விலகியுள்ளதாக தெரிகிறது. கால்ஷீட் பிரச்னையே காரணம் என்று கூறுகிறார்கள். இதனையடுத்து இந்த கதாபாத்திரத்துக்காக ஐஸ்வர்யா ராஜேஷ் பெயர் பரிந்துரை செய்யப்பட்டு, அவர் ஒப்பந்தமாகியுள்ளார். அமலாபால் விலகியுள்ளதையடுத்து, மூன்றாவது முறையாக "வட சென்னை' படத்துக்கான ஹீரோயின் மாற்றப்பட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com