உடல் எடையை குறைத்த லட்சுமிமேனன்!

1980-களின் பின்னணியை களமாக கொண்டு உருவாகி வரும் படம் "யங் மங் சங்.' பிரபுதேவா கதாநாயகனாக நடிக்கிறார்.
உடல் எடையை குறைத்த லட்சுமிமேனன்!

1980-களின் பின்னணியை களமாக கொண்டு உருவாகி வரும் படம் "யங் மங் சங்.' பிரபுதேவா கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக லட்சுமிமேனன் நடிக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார் எம்.எஸ்.அர்ஜுன். வில்லன் ஒருவனை பழிவாங்க பிரபுதேவாவும் நண்பர்களும் கராத்தே கற்க எண்ணுகின்றனர். இதற்காக சீனா சென்று ஷாவலின் பாணியிலான கலையை கற்க முடிவு செய்து புறப்படுகின்றனர். கராத்தேயில் தேர்ச்சி பெற்ற பிறகு திரும்பி வரும் பிரபுதேவா எப்படி பழிக்கு பழி வாங்குகிறார். அதற்காக அவர் தீட்டிய திட்டங்கள் என்ன? அதை நிறைவேற்ற அவர் தேர்ந்தெடுத்த வழி முறைகள் என்ன?  என்பதுதான் கதை. பிரபுதேவாவின் நடனத்தை பிரதானமாக கொண்டு பல்வேறு காட்சிகள் இதில் அமைக்கப்பட்டுள்ளன. பரதநாட்டிய பெண்ணாக நடிக்கும் லட்சுமிமேனனுக்கு உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நிபந்தனை  விதிக்கப்பட்டது. அதன்படி 2 மாதம் அவர் கடுமையான உடற்பயிற்சி செய்து உடல் எடை குறைத்திருக்கிறார். அடுத்த கட்டப் படப்பிடிப்புகளுக்காக படக்குழு சீனா செல்லவிருக்கிறது. அங்கு நிஜ கராத்தே மாஸ்டர்களிடம் பிரபுதேவா கராத்தே பயிற்சி பெற உள்ளார். சில காட்சிகள் சீனாவில் படமாக்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com