3 ஆண்டு சட்டப் படிப்பில் சேர ஒரு மருத்துவர், 110 பொறியாளர்கள் விண்ணப்பம்

மூன்று ஆண்டு எல்.எல்.பி. (ஹானர்ஸ்) சட்டப் படிப்பில் சேர ஒரு மருத்துவர், 110 பொறியாளர்கள் உள்பட 624 பேர் விண்ணப்பித்திருப்பது தெரியவந்திருக்கிறது.

மூன்று ஆண்டு எல்.எல்.பி. (ஹானர்ஸ்) சட்டப் படிப்பில் சேர ஒரு மருத்துவர், 110 பொறியாளர்கள் உள்பட 624 பேர் விண்ணப்பித்திருப்பது தெரியவந்திருக்கிறது.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள ஆற்றல்சார் பள்ளியில் வழங்கப்படும் இந்த மூன்று ஆண்டு ஹானர்ஸ் சட்டப் படிப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 17-ஆம் தேதி நடைபெற உள்ளது.
மொத்தமுள்ள 133 இடங்களை நிரப்புவதற்கான சேர்க்கை ஒரு நாளில் நடத்தப்பட இருக்கிறது. இதற்கு விண்ணப்பித்தவர்களில் தகுதியுடையவர்களுக்கான தரவரிசைப் பட்டியல், கட்-ஆஃப் விவரங்கள் சட்டப் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
ஒரு மருத்துவர், 110 பொறியாளர்கள்: இந்த மூன்றாண்டு சட்டப் படிப்பில் சேர இம்முறை ஒரு மருத்துவ மாணவர் விண்ணப்பித்துள்ளார். மருத்துவ மாணவர் விண்ணப்பிப்பது இதுவே முதன் முறை என்கின்றனர் பல்கலைக்கழக அதிகாரிகள். இதுபோல 110 பொறியியல் பட்டதாரிகளும் விண்ணப்பித்துள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட அதிகம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுபோல பி.ஏ., பி.காம். உள்ளிட்ட கலை பட்டதாரிகள் 325 பேர், அறிவியல் பட்டதாரிகள் 138 பேர் என மொத்தம் 624 பேர் எல்.எல்.பி. (ஹானர்ஸ்) படிப்பில் சேர இம்முறை விண்ணப்பித்திருக்கின்றனர். கடந்த ஆண்டு 400 பேர் மட்டும் விண்ணப்பித்திருந்தனர்.
இம்முறை விண்ணப்பித்துள்ள 624 பேரில் 468 பேர் தகுதியுள்ள மாணவர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com