போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள குறுந்தகடு: அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தகவல்

அகில இந்திய போட்டித் தேர்வுகளை அச்சமின்றி எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களுக்கு கேள்வித்தாள்கள் அடங்கிய சி.டி.க்கள் வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்
சென்னை அருங்காட்சியகத்தில் நடைபெற்ற விழாவில் விருது பெற்ற இந்திய தொல்லியல் துறை முன்னாள் கல்வெட்டு ஆய்வாளர் எஸ்.ராஜவேலு, வயலின் சகோதரிகள் லலிதா- நந்தினி,
சென்னை அருங்காட்சியகத்தில் நடைபெற்ற விழாவில் விருது பெற்ற இந்திய தொல்லியல் துறை முன்னாள் கல்வெட்டு ஆய்வாளர் எஸ்.ராஜவேலு, வயலின் சகோதரிகள் லலிதா- நந்தினி,

அகில இந்திய போட்டித் தேர்வுகளை அச்சமின்றி எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களுக்கு கேள்வித்தாள்கள் அடங்கிய சி.டி.க்கள் வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
தமிழக அரசின் அருங்காட்சியகங்கள் துறை மற்றும் தொல்லியல்துறை சார்பில் சென்னை வட்டாரத்தின் பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் தொடர் சொற்பொழிவுகளின் தொடக்க விழா சென்னை எழும்பூரில் உள்ள அருங்காட்சியக கலையரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சென்னை வட்டாரத்தின் பண்டைய வரலாறு குறித்து பாடல்களை வெளியிட்டு தொல்லியல் அறிஞர்களுக்கு விருது வழங்கிப் பேசியது:
மதுரையில் உள்ள அழகர்புரம் துறைமுகமாக இருந்துள்ளது. தமிழகத்தில் அரியலூர், பெரம்பலூரில் கிடைத்த சில சிற்பங்களை ஆராய்ச்சி செய்ததில், கடல் பகுதி 2 ஆயிரம் ஆண்டுக்கு முன்னர் இருந்துள்ளது என்பது தெரியும்.
பள்ளிக் கல்வித் துறையில் செய்யப்பட்டு வரும் மாற்றங்களால் அடுத்த 2 மாதங்களுக்கு பிறகு தமிழகம் இந்தியாவுக்கே வழிகாட்டும்.
மத்திய அரசு கொண்டு வரும் பொதுத் தேர்வு தொடர்பாக மாணவர்கள் கொண்டிருக்கும் அச்சம் 3 மாதங்களில் தீர்க்கப்படும். இதற்காக 54 ஆயிரம் கேள்வித்தாள்கள் அடங்கிய, தமிழிலும், ஆங்கிலத்திலும் புகைப்படத்துடன் 30 மணி நேரம் ஓடும் குறுந்தகடு வழங்கவுள்ளோம்.
சீருடை வழங்கலில் என்ன மாற்றம்? தற்போது மாணவர்களின் சீருடை 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை ஒரே மாதிரியாக இருக்கிறது. இதனை மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது. 1 முதல் 5 ம் வகுப்பு வரை, 6 முதல் 10-ஆ ம் வகுப்பு வரை, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு என 3 பிரிவாக சீருடைகள் மாற்றியமைக்கப்படும்.
தற்போது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு 4 சீருடைகளைத் தைத்துத் தருகிறது. ஆனால் எதிர்காலத்தில் 2 சீருடைகளை தைத்துத் தருவது, 2 சீருடைகளுக்கான தொகையை மாணவர்களிடம் ஒப்படைத்து அவர்களே தைத்துக் கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் அமைச்சர் செங்கோட்டையன்.
நிகழ்ச்சியில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா, அருங்காட்சியங்கள் துறை மற்றும் தொல்லியல்துறை ஆணையர் ஜகந்நாதன், அருங்காட்சியங்கள் துறை உதவி இயக்குநர் சேகர், சென்னை 2000 பிளஸ் அறக்கட்டளைத் தலைவர் ஆர்.ரங்கராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விமர்சனம் பற்றிகவலையில்லை

தான் வெளிப்படைத்தன்மையுடன் நடப்பதால் பிறர் விமர்சிப்பதைப் பற்றிக் கவலையில்லை என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சென்னையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத் தேர்வு குறித்து மதுரையில் ஒருவர் வழக்குத் தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. ஆனால் மக்களின் மனநிலையைப் பொருத்தவரை பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத் தேர்வு கொண்டு வர வேண்டும் என விரும்புகின்றனர்.
பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கு மாதிரி வினாத்தாள் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு ஏற்றவாறு ஆசிரியர்கள் பயிற்சி அளிப்பர். ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள இடத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் மாதம் ரூ.7,500 சம்பளத்தில் நியமிக்கக் கூறி உள்ளோம். ஒரு இடத்தில் ஆசிரியர் இல்லாமல் இருந்தாலும் நியமிக்க வேண்டும் எனக் கூறி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நான் வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொண்டிருக்கிறேன். எனவே பிறர் கூறும் விமர்சனம் பற்றி எனக்கு கவலையில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com