ஐ.ஐ.எம்.களில் சேருவதற்கான தகுதித் தேர்வு: விண்ணப்பிக்க செப்.20 கடைசி

ஐஐஎம் மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதற்கான சி.ஏ.டி. 2017 (காட்) தகுதித் தேர்வுக்கான ஆன்-லைன் பதிவு புதன்கிழமை தொடங்கியது. ஆன்-லைன் பதிவு செய்ய செப்டம்பர் 20 கடைசி

ஐஐஎம் மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதற்கான சி.ஏ.டி. 2017 (காட்) தகுதித் தேர்வுக்கான ஆன்-லைன் பதிவு புதன்கிழமை தொடங்கியது. ஆன்-லைன் பதிவு செய்ய செப்டம்பர் 20 கடைசி தேதியாகும். ஆமதாபாத், பெங்களூரு, அமிருதசரஸ் உள்பட நாடு முழுவதும் 20 ஐஐஎம் கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் பல்வேறு முதுநிலை மேலாண்மைப் படிப்புகளில் இந்தத் தகுதித் தேர்வின் அடிப்படையிலேயே சேர்க்கை நடத்தப்படுகிறது.
ஐஐஎம் சார்பில் நடத்தப்படும் இந்த ஆன்-லைன் தேர்வு தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட நாடு முழுவதும் 140 நகரங்களில் அமைக்கப்படும் மையங்களில் நவம்பர் 26 -ஆம் தேதி இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட உள்ளது.
மேலும் விவரங்களை www.iim.ac.in என்ற இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com