நாளையுடன் நிறைவு பெறுகிறது பி.இ. கலந்தாய்வு

பொறியியல் பொதுப் பிரிவு கலந்தாய்வு வெள்ளிக்கிழமையுடன் நிறைவுபெற உள்ளது.

பொறியியல் பொதுப் பிரிவு கலந்தாய்வு வெள்ளிக்கிழமையுடன் நிறைவுபெற உள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இடம் பெற்றுள்ள அரசு ஒதுக்கீட்டு பி.இ. இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் ஜூலை 17-ஆம் தேதி தொடங்கியது. முதலில், பிளஸ் 2 தொழில் பிரிவு மாணவர்களுக்கும், பின்னர் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கு சேர்க்கை நடத்தப்பட்டது. அதன் பிறகு பொதுப் பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கை ஜூலை 23-ஆம் தேதி தொடங்கியது. பொதுப் பிரிவு கலந்தாய்வு ஆகஸ்ட் 11-ஆம் தேதியோடு முடிவடைகிறது.
இந்நிலையில், பொதுப்பிரிவினருக்கென கலந்தாய்வில் ஒதுக்கப்பட்டிருந்த 1லட்சத்து 75,456 பி.இ. இடங்களில் 79,315 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. 96,141 இடங்கள் நிரம்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பி.ஆர்க். சேர்க்கை: பி.இ. பொதுப் பிரிவு சேர்க்கைக்குப் பிறகு, கட்டடவியல் பொறியியல் (பி.ஆர்க்.) சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 19-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டில் வியாழக்கிழமை (ஆக.10) வெளியிடப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com