ராமச்சந்திரா பல்கலை.யில் 2 துணை மருத்துவ படிப்புகள் அறிமுகம்

போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில் நிகழ் கல்வியாண்டில் 2 துணை மருத்துவப் படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில் நிகழ் கல்வியாண்டில் 2 துணை மருத்துவப் படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நாட்டிலேயே முதன்முறையாக 4 ஆண்டுகள் பி.எஸ்சி., மெடிக்கல் மைக்ரோ பயாலஜி மற்றும் அப்ளைட் மாலிகுலர் பயாலஜி படிப்பும், நான்கரை ஆண்டுகள் இளநிலை ஆக்குபேஷனல் தெரபி படிப்பும் இங்கு தொடங்கப்பட உள்ளன.
பிளஸ் 2-வில் ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது தாவரவியல், விலங்கியல், உயிரி தொழில்நுட்பம், மைக்ரோபயாலஜி மற்றும் பயோ கெமிஸ்ட்ரி படித்தவர்கள் மெடிக்கல் மைக்ரோ பயாலஜி படிப்புக்கும், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது தாவரவியல், விலங்கியல் படித்தவர்கள் ஆக்குபேஷனல் தெரபி படிப்புக்கும் விண்ணப்பிக்கலாம். www.sriramachandra.edu.in. என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள் ஆகஸ்ட் 21. நேர்முகத் தேர்வு ஆகஸ்ட் 24.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com