படிப்பு உதவித் தொகை தேர்வு நுழைவுச் சீட்டு நாளை முதல் பதிவிறக்கம் செய்யலாம்

தேசிய வருவாய் வழி-திறன் படிப்பு உதவித் தொகை திட்டத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை தொடர்புடைய பள்ளியின் தலைமையாசிரியர்கள்

தேசிய வருவாய் வழி-திறன் படிப்பு உதவித் தொகை திட்டத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை தொடர்புடைய பள்ளியின் தலைமையாசிரியர்கள் வெள்ளிக்கிழமை (டிச.8) முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி புதன்கிழமை வெளியிட்ட செய்தி:

தேசிய வருவாய் வழி-திறன் படிப்பு உதவி தொகை திட்டத் தேர்வு வரும் டிச. 16-ஆம் தேதி நடைபெறவுள்ளது. 
விண்ணப்பித்துள்ள தேர்வர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளைப் பள்ளிகளுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள USER ID மற்றும் PASSWORD-ஐ பயன்படுத்தி பள்ளியின் முதல்வர் அல்லது தலைமையாசிரியர் பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வழங்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com