சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு தேர்வுகளில் மதிப்பெண் முறை பின்பற்றப்படும்: சிபிஎஸ்இ அறிவிப்பு

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில், வருகிற மார்ச் மாதம் நடக்கும் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வுகளில் மதிப்பெண் முறை பின்பற்றப்படும் என்று மத்திய
சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு தேர்வுகளில் மதிப்பெண் முறை பின்பற்றப்படும்: சிபிஎஸ்இ அறிவிப்பு

புதுதில்லி: சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில், வருகிற மார்ச் மாதம் நடக்கும் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வுகளில் மதிப்பெண் முறை பின்பற்றப்படும் என்று மத்திய கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நேற்று திங்கள்கிழமை அறிவித்துள்ளது.

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் தற்போது, கிரேட் முறை பின்பற்றப்படும் நிலையில், வருகிற 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடக்கும் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வுகளில் மதிப்பெண் முறையே மீண்டும் பின்பற்றப்படும் என்று மத்திய கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நேற்று திங்கள்கிழமை அறிவித்தது. மேலும், 10-ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு கட்டாயம் ஆவதாகவும் சிபிஎஸ்இ மீண்டும் தெரிவித்துள்ளது.

10-ஆம் வகுப்புக்கு கணிதம், அறிவியல், சமூக அறிவியல், ஆங்கிலம் (தகவல் தொடர்பு), ஆங்கிலம் (மொழி மற்றும் இலக்கியம்) ஆகிய பாடங்களுக்கும், 12-ஆம் வகுப்பு தேர்வில் கணக்கு பதிவியல், உயிரியல், வணிக கல்வி, வேதியியல், பொருளாதாரம், ஆங்கிலம், ஹிந்தி, கணிதம், இயற்பியல் ஆகிய பாடங்களுக்கும் மதிப்பெண் முறை பின்பற்றப்படும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

மதிப்பெண் முறையை இணையதளத்தில் பார்த்து கொள்ளலாம் என்றும், தேர்வு கால அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளது. 

மேலும், நாடு முழுவதும் 18 ஆயிரத்துக்கும் அதிகமான பள்ளிகள் சிபிஎஸ்இ உடன் இணைக்கப்பட்டுள்ளன. இதில்,10,678 பள்ளிகள் 12-ஆம் வகுப்பு தேர்வுக்கு பதிவு செய்துள்ளன. அதில், மாணவர்கள் 6,38,865 பேர், மாணவிகள் 4,60,026 பேர் என மொத்தம் 10,98,891 பேர் இந்த ஆண்டு தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளார்கள் பதிவு செய்துள்ளனர். 

கடந்த 2017-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2.82 சதவீதம் அதிகரித்துள்ளது. சுமார் 10,67,900 மாணவர்களில், 6,21,259 பேர் மாணவர்கள், 4,46,641 மேர் மாணவிகள் என தெரிவிக்கப்ட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com