தொலைநிலைக் கல்வி நிறுவன தேர்வுகள்: நுழைவுச் சீட்டுகள் பதிவேற்றம்

சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவனம் சார்பில் டிசம்பர் மாதத் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்தி:

சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவனம் சார்பில் டிசம்பர் மாதத் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்தி:
தொலைநிலைக் கல்வி நிறுவனம் சார்பில் வழங்கப்படும் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான டிசம்பர் மாதத் தேர்வுகள் வருகிற 16 -ஆம் தேதி தொடங்க உள்ளன. 
இந்தத் தேர்வுகள் அனைத்தும் வார இறுதி நாள்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் நடத்தப்படும். பட்டயப் படிப்பு மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கான தேர்வுகள் ஜனவரி 2 -ஆம் தேதி முதல் தொடங்க உள்ளன. 
இந்தத் தேர்வுகள் அனைத்து நாள்களும் நடத்தப்படும்.
இந்தத் தேர்வுகளுக்கான கால அட்டவணைகள், மாணவர்களுக்கான தேர்வறை நுழைவுச் சீட்டுகள் அனைத்தும் பல்கலைக்கழக இணையதளத்தில் www.unom.ac.in பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com