ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுக்கு ஜன. 7-இல் இலவச பயிற்சி

ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் தேர்வுகளுக்கு வழிகாட்டும் இலவச பயிற்சி முகாம், சென்னையில் வரும் ஜனவரி 7 -ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் தேர்வுகளுக்கு வழிகாட்டும் இலவச பயிற்சி முகாம், சென்னையில் வரும் ஜனவரி 7 -ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.
இதுகுறித்து பெரியார் ஐஏஎஸ் அகாதெமி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை பெரியார் திடலில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் பெரியார் ஐஏஎஸ் அகாதெமியில், 2018 -ஆம் ஆண்டுக்கான ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் தேர்வுக்கான வழிகாட்டும் இலவச பயிற்சி முகாம் ஜனவரி 7 -ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது.
இதில் ஐஏஎஸ் தேர்வுக்கு எளிமையாக பயிலும் வழிமுறைகளைப் பற்றியும், மாணவர்கள் தேர்வுக்கு தங்களை எவ்வாறு தயார் செய்து கொள்ள வேண்டும் என்பது பற்றியும் பேராசிரியர்களும், வெற்றி பெற்ற முன்னாள் மாணவர்களும் விளக்கமாக எடுத்துரைக்க உள்ளனர். மேலும் விவரங்களை, பெரியார் ஐஏஎஸ் அகாதெமி, பெரியார் திடல், ஈ.வி.கே சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 7 என்ற முகவரியிலும், 044- 2661 8056, 99406 38537 ஆகிய எண்களிலும் பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com