பத்தாம் வகுப்பு அறிவியல் பாட செய்முறை பயிற்சி: தனித்தேர்வர்கள் பதிவு செய்ய அறிவுறுத்தல்

தமிழகத்தில் 2017-2018-ஆம் கல்வியாண்டில் மார்ச் மாதம் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வின் அறிவியல் பாட செய்முறை பயிற்சிக்கு, தனித்தேர்வர்கள் ஜூன் 5-ஆம் தேதி முதல் பதிவு செய்யலாம்

தமிழகத்தில் 2017-2018-ஆம் கல்வியாண்டில் மார்ச் மாதம் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வின் அறிவியல் பாட செய்முறை பயிற்சிக்கு, தனித்தேர்வர்கள் ஜூன் 5-ஆம் தேதி முதல் பதிவு செய்யலாம் என அரசுத்தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு:
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க உள்ள தனித் தேர்வர்கள் அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்புக்குப் பதிவு செய்துகொள்ள அரசுத் தேர்வுகள் இயக்குநர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக இயக்குநர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2018-ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க உள்ள தனித் தேர்வர்கள், அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் சேர பெயர்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும்.
தொடர்புடைய மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் திங்கள்கிழமை (ஜூன் 5) முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை பெயர்களைப் பதிவு செய்யலாம். மாவட்ட கல்வி அலுவலரால் ஒதுக்கீடு செய்யப்பட்ட பள்ளிகளுக்குச் சென்று செய்முறைப் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ள வேண்டும்.
இந்தப் பயிற்சி வகுப்புக்கு 80 சதவீத வருகை புரிபவர்கள் மட்டுமே பொதுத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். இதற்கான விண்ணப்பத்தை www.dge.tn.gov.in   என்ற இணையதளத்திலிருந்து ஜூன் 5 முதல் ஜூன் 30 வரை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இதைத் தொடர்ந்து விவரங்களை பூர்த்தி செய்து இரண்டு நகல் எடுத்து தொடர்புடைய மாவட்ட கல்வி அலுவலரிடம் தனித்தேர்வர்கள் ஜூன் 30-க்குள் ஒப்படைக்க வேண்டும் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com