கல்லூரிகளில் 200 ஆவின் பாலகங்கள்

கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் 200 புதிய ஆவின் பாலகங்கள் நிறுவப்படும்.
கல்லூரிகளில் 200 ஆவின் பாலகங்கள்

கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் 200 புதிய ஆவின் பாலகங்கள் நிறுவப்படும்.
இது தொடர்பாக நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்பு: 2016-ஆம் ஆண்டில் ஆவின் நிறுவனத்தின் சராசரி பால் பதப்படுத்தும் திறன் நாளொன்றுக்கு 40.22 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது. பால் உற்பத்தியாளர்கள் அதிக விலை பெறும் வகையில், பல வகையான பால் பொருள்களை உற்பத்தி செய்து அதன் மதிப்பைக் கூட்ட ஆவின் நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
பல்வேறு வகையான நறுமணப் பால் தயாரிக்க, நாளொன்றுக்கு 25 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு திறன் கொண்ட உயர் வெப்பநிலையில் பதப்படுத்தும் ஆலை மதுரையில் ரூ.40 கோடியில் அமைக்கப்படும்.
ஆவின் பொருள்களை மக்களிடையே பிரபலப்படுத்த கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் 200 புதிய ஆவின் பாலகங்கள் நிறுவப்படும். நிதிநிலை அறிக்கையில் பால்வளத் துறைக்கு ரூ.130 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com