பொறியியல் கல்லூரி ஆசிரியர் தகுதி வழிகாட்டுதல்: ஏஐசிடிஇ வெளியீடு

பொறியியல், தொழில் நுட்பக் கல்லூரிகளில் பல்வேறு துறைகளில்  நியமிக்கப்படும் ஆசிரியர்களின் கல்வித் தகுதிக்கான வழிகாட்டுதலை ஏஐசிடிஇ

சென்னை: பொறியியல், தொழில் நுட்பக் கல்லூரிகளில் பல்வேறு துறைகளில்  நியமிக்கப்படும் ஆசிரியர்களின் கல்வித் தகுதிக்கான வழிகாட்டுதலை ஏஐசிடிஇ (அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில்) வெளியிட்டுள்ளது.

இந்தக் கல்வித் தகுதிகளின் அடிப்படையிலேயே ஆசிரியர்கள் நியமிக்கப்படவேண்டும்.

பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரிகளின் பல்வேறு துறைகளில் நியமிக்கப்படும் ஆசிரியர்களின் கல்வித் தகுதிக்கான வழிகாட்டுதலை ஏஐசிடிஇ அவ்வப்போது மாற்றியமைத்து வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், நிகழாண்டுக்கான புதிய வழிகாட்டுதலை ஏஐசிடிஇ இப்போது வெளியிட்டுள்ளது.

இதில் ஒவ்வொரு பொறியியல் துறையிலும் நியமிக்கப்படும் ஆசிரியர்கள் எந்தவகையான இளநிலை பட்டப் படிப்பையும், முதுநிலை பட்டப் படிப்பையும் பெற்றிருக்க வேண்டும் என முழுமையான விவரம் இடம்பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com