தேர்வுத் தாள் திருத்தும் பணி: தவறிழைத்த 1,070 பேராசிரியர்கள் தகுதி நீக்கம்: அண்ணா பல்கலை. நடவடிக்கை

தேர்வுத் தாள் திருத்தும் பணியில் தவறிழைத்த 1,070 பேராசிரியர்களை தகுதி நீக்கம் செய்து அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தேர்வுத் தாள் திருத்தும் பணி: தவறிழைத்த 1,070 பேராசிரியர்கள் தகுதி நீக்கம்: அண்ணா பல்கலை. நடவடிக்கை

தேர்வுத் தாள் திருத்தும் பணியில் தவறிழைத்த 1,070 பேராசிரியர்களை தகுதி நீக்கம் செய்து அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன் மூலம் இவர்கள் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குத் தேர்வுத் தாள் திருத்தும் பணியிலோ அல்லது கேள்வித் தாள் தயாரிக்கும் பணியிலோ ஈடுபட முடியாது.
தேர்வுத் தாள் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும் பொறியியல் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வந்தது. இதற்காக பல்கலைக்கழகம் சார்பில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. முதலில் தலா ரூ. 300 கட்டணம் செலுத்தி தேர்வுத்தாள் நகலை மாணவர்கள் பெற வேண்டும். பின்னர் ஒவ்வொரு தேர்வுத் தாள் மறுமதிப்பீடுக்கும் ரூ.400 வீதம் கட்டணம் செலுத்த வேண்டும். 
இவ்வாறு மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் பெரும்பாலானவர்களுக்கு, மதிப்பெண் மாறுதலில் தொடர்ச்சியாக மிகப் பெரிய வித்தியாசம் இருந்து வந்தது. இது மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து, இது தொடர்பாக ஆய்வு செய்ய முடிவெடுத்த பல்கலைக்கழகம், 2017 ஏப்ரல், மே பருவத் தேர்வு முடிவுகள் குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்தது. 
இது குறித்துஅண்ணா பல்கலைக்கழக உயர்அதிகாரிஒருவர்கூறியது: இந்தக் குழு மேற்கொண்ட ஆய்வில், 1,070 பேராசிரியர்கள் தேர்வுத் தாள் திருத்தும் பணியில் முறையாக ஈடுபடாததும் அவர்கள் திருத்திய தேர்வுத் தாள்களில் மதிப்பெண் மாறுதலில் மிகப் பெரிய வித்தியாசம் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
3 ஆண்டுகளுக்கு தடை: அதன்படி, 21 முதல் 30 மதிப்பெண்கள் வரை வித்தியாசம் வரும் வகையில் தேர்வுத் தாளை திருத்திய 433 பேராசிரியர்களுக்கு ஓராண்டும், 31 முதல் 40 மதிப்பெண்கள் வரை வித்தியாசம் வரும் வகையில் திருத்திய 364 பேராசிரியர்களுக்கு 2 ஆண்டுகளும், 40 மதிப்பெண்களுக்கு மேல் வித்தியாசம் வரும் வகையில் தேர்வுத் தாளைத் திருத்திய 273 பேராசிரியர்களுக்கு 3 ஆண்டுகளும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த 1,070 பேராசிரியர்களும் இந்தத் தடைக் காலத்தில் தேர்வுத் தாள் திருத்தும் பணியிலோ அல்லது கேள்வித் தாள் தயாரிக்கும் பணியிலோ ஈடுபட முடியாது.
இந்தத் தவறுகளைக் குறைக்கும் வகையில் சில மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. இதுவரை 20 தேர்வுத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கு ஒரு தலைமை மதிப்பீட்டாளர் என்று இருந்ததை மாற்றி, இனி 10 மதிப்பீட்டாளர்களுக்கு ஒரு தலைமை மதிப்பீட்டாளர் நியமிக்கப்பட உள்ளார்.
அதுபோல, இதுவரை தலைமை மதிப்பீட்டாளருக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்த விடைப் பட்டியல், இனி ஒவ்வொரு மதிப்பீட்டாளருக்கும் வழங்கப்படும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com