இந்திய முறை மருத்துவப் படிப்பு: நாளை முதல் விண்ணப்ப விநியோகம்

சித்த மருத்துவம், ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய முறை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் செவ்வாய்க்கிழமை தொடங்க உள்ளது.

சித்த மருத்துவம், ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய முறை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் செவ்வாய்க்கிழமை தொடங்க உள்ளது.
சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் ஆகிய இந்திய முறை படிப்புகளுக்கு தமிழகத்தில் சென்னை (3 கல்லூரிகள்), திருமங்கலம் (மதுரை), பாளையங்கோட்டை, கோட்டார் (நாகர்கோவில்) ஆகிய இடங்களில் மொத்தம் 6 அரசு கல்லூரிகள் உள்ளன. இதுதவிர 23 தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்தப் படிப்புகளுக்கு 396 அரசு இடங்களும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 916 அரசு ஒதுக்கீட்டு இடங்களும் உள்ளன. 
பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில்: நிகழ் கல்வியாண்டில் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்ப விநியோகம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்க உள்ளது. 
தமிழகத்தில் உள்ள 6 அரசு கல்லூரிகளில் நேரடி விண்ணப்ப விநியோகம் நடைபெறும். இதுதவிர, www.tnhealth.org  என்ற இணையதளத்திலும் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செப்டம்பர் 5 -ஆம் தேதி பிற்பகல் 3 மணி வரை விண்ணப்பங்களை பெறலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதே தேதியில் (செப்.5) மாலை 5.30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com