சென்னைப் பல்கலை. தேர்வு முடிவு இன்று வெளியீடு

இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான நவம்பர் (2017-ஆம் ஆண்டு) மாதத் தேர்வு முடிவுகள் புதன்கிழமை (ஜன.31) வெளியிடபடும் என சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான நவம்பர் (2017-ஆம் ஆண்டு) மாதத் தேர்வு முடிவுகள் புதன்கிழமை (ஜன.31) வெளியிடபடும் என சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகளை  www.results.unom.ac.in, www.ideunom.ac.in  ஆகிய இணைதளங்களில் புதன்கிழமை மாலை பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
மறு மதிப்பீடு: தேர்வு மதிப்பெண் மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் ஆன்-லைனில் பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் பாடம் ஒன்றுக்கு ரூ. 1000 கட்டணம் செலுத்த வேண்டும். மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் பாடம் ஒன்றுக்கு ரூ. 300 கட்டணம் செலுத்த வேண்டும் எனப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com