பி.இ. சேர்க்கை: 28-இல் தரவரிசைப் பட்டியல் வெளியீடு

பி.இ. ஆன்-லைன் கலந்தாய்வில் பங்கேற்க விண்ணப்பித்தவர்களுக்கான தர வரிசைப் பட்டியல் வரும் 28-ஆம் தேதி வெளியிடப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

பி.இ. ஆன்-லைன் கலந்தாய்வில் பங்கேற்க விண்ணப்பித்தவர்களுக்கான தர வரிசைப் பட்டியல் வரும் 28-ஆம் தேதி வெளியிடப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கும் வரும் 28-ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
இணையதளத்தில் பதிவேற்றம்: அண்ணா பல்கலைக்கழகத்தில் வரும் 28-ஆம் தேதி காலை 8.30 மணிக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. உடனடியாக மாணவர்களின் பார்வைக்காக அண்ணா பல்கலைக்கழக இணையதளத்திலும் பட்டியல் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது. அரசு ஒதுக்கீட்டு பி.இ. இடங்களுக்கான ஆன்-லைன் கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் ஜூலை இரண்டாம் வாரத்தில் தொடங்க உள்ளது. இதில் பங்கேற்க மொத்தம் 1 லட்சத்து 59 ஆயிரத்து 631 மாணவ, மாணவிகள் ஆன்-லைனில் விண்ணப்பப் பதிவைச் செய்திருந்தனர். இவர்களுக்கான சமவாய்ப்பு எண் கடந்த 5- ஆம் தேதி வெளியிடப்பட்டது.
49,781 பேர் நிராகரிப்பு: விண்ணப்பப் பதிவு செய்தவர்களுக்கான அசல் சான்றிதழ் சரிபார்ப்பு, தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 42 உதவி மையங்களில் ஜூன் 8=ஆம் தேதி தொடங்கி 14-ஆம் தேதி வரை நடைபெற்றது. சென்னை மையத்தில் மட்டும் மூன்று நாள்கள் கூடுதலாக ஜூன் 17 ஆம் தேதி வரை அசல் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. 
இந்த அசல் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்கள் மட்டுமே, ஆன்-லைன் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். இந்த நிலையில், விண்ணப்பப் பதிவு செய்தவர்களில் 49,781 பேர் அசல் சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்திருப்பது தெரிய வந்திருக்கிறது.
ஜூன் 28-இல் தரவரிசைப் பட்டியல்: இந் நிலையில் ஆன்-லைன் விண்ணப்பப் பதிவு செய்து, சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்ற 1 லட்சத்து 9 ஆயிரத்து 850 பேருக்கான தரவரிசைப் பட்டியல் வரும் 28-ஆம் தேதி காலை 8.30 மணிக்கு வெளியிடப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அன்றைய தினமே ஆன்-லைன் கலந்தாய்வு தொடங்கும் தேதியும் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com