10-ம் வகுப்பு தேர்வு மதிப்பெண்ணில் சலுகை: சிபிஎஸ்இ தேர்வு வாரியம் அறிவிப்பு

பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு மதிப்பெண்ணில் புதிய சலுகையை சிபிஎஸ்இ வாரியம் அறிவித்துள்ளது.
10-ம் வகுப்பு தேர்வு மதிப்பெண்ணில் சலுகை: சிபிஎஸ்இ தேர்வு வாரியம் அறிவிப்பு

பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு மதிப்பெண்ணில் புதிய சலுகையை சிபிஎஸ்இ வாரியம் அறிவித்துள்ளது.

சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரிய பாடத் திட்டத்தில் 2017 வரை பத்தாம் வகுப்புக்கு பள்ளி அளவிலேயே தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தன. 
இத்தேர்வுகளில் தன்னிச்சையாக மதிப்பெண்கள் வழங்கப்படுவதால் கல்வித்தரம் குறைந்துள்ளதாக மத்திய அரசின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து இந்த ஆண்டு முதல் 10-ம் வகுப்புக்கு கட்டாய பொதுத்தேர்வு நடத்தப்படும் என வாரியம் அறிவித்தது. 
இந்த அறிவிப்பின்படி பத்தாம் வகுப்பு மாணவர்கள் முதல்முறையாக பொதுத்தேர்வை எழுத உள்ளனர். இதனால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க சிபிஎஸ்இ தேர்வு கமிட்டி புதிய சலுகையை அறிவித்துள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு பிப்ரவரி 26-ம் தேதி வெளியிடப்பட்டது.

அந்த அறிவிப்பில் சிபிஎஸ்இ தலைவர் அனிதா கர்வால் தெரிவித்திருப்பதாவது:

2018 பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஒருமுறை அடிப்படையில் தேர்ச்சிக்கான மதிப்பெண்களில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி மொழிப் பாடம், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் அகமதிப்பீட்டுக்கான 20 மதிப்பெண் மற்றும் எழுத்துத் தேர்வுக்கான 80 மதிப்பெண்களில் ஒட்டு மொத்தமாக 33 சதவீதமான 33 மதிப்பெண்களை எடுத்தால் தேர்ச்சி பெறுவர். அகமதிப்பீடு மற்றும் எழுத்துத் தேர்வில் தனித் தனியாக 33 சதவீத மதிப்பெண்கள் எடுக்கத் தேவை இல்லை.

மேலும், முக்கியப் பாடங்கள் தவிர மாணவர்கள் எடுத்த விருப்பப் பாடங்களில் செய்முறை தேர்வுகள் இருந்தால் அதிலும் ஒட்டுமொத்தமாக 33 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் தேர்ச்சி என அறிவிக்கப்படும். 
தொழிற்கல்வி பாடப் பிரிவு மாணவர்களுக்கு மொழிப் பாடம், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூகஅறிவியல் ஆகிய 5 பாடங்களுக்கு மட்டும் ஒட்டுமொத்தமாக 33 சதவீத மதிப்பெண் பெறலாம் என்ற புதிய சலுகை பொருந்தும்.

செய்முறை தேர்வு அடங்கிய மற்ற தொழிற்கல்வி பாடங்களுக்கு அகமதிப்பீடாக ஏற்கெனவே 50 சதவீதம் வழங்கப்படுவதால் அந்தப் பாடங்களுக்கு புதிய சலுகை பொருந்தாது என அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com