இலக்கை நிர்ணயித்து தன்னம்பிக்கையுடன் பயணித்தால் எந்த துறையிலும் சாதிக்கலாம்: கீர்த்திவாசன் பேட்டி

இலக்கை நிர்ணயித்து தன்னம்பிக்கையுடன் பயணித்தால் எந்த துறையிலும் சாதிக்கலாம்: கீர்த்திவாசன் பேட்டி

இளைஞர்கள் தன்னம்பிக்கையுடன் இலக்கை நோக்கி பயணித்தால் எந்த துறையிலும் சாதிக்கலாம் என்று ஐஏஎஸ் தேர்வில் மாநில அளவில் முதலிடம்

இளைஞர்கள் தன்னம்பிக்கையுடன் இலக்கை நோக்கி பயணித்தால் எந்த துறையிலும் சாதிக்கலாம் என்று ஐஏஎஸ் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த கீர்த்தி வாசன் தெரிவித்தார்.

2017-ஆம் ஆண்டுக்கான முதல் நிலைத் தேர்வு 2017 ஜூன் மாதத்திலும், முதன்மைத் தேர்வுகள் 2017 அக்டோபர்- நவம்பர் மாதங்களிலும் நடத்தப்பட்டது. இறுதித் தேர்வான ஆளுமைத் திறன் தேர்வு கடந்த பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை நடத்தப்பட்டது.

இதற்கான இறுதித் தேர்வு முடிவுகளை யுபிஎஸ்சி வெள்ளிக்கிழமை வெளியிட்டது. நாடு முழுவதிலும் இருந்து 2500 பேர் பங்கேற்ற இந்த இறுதித் தேர்வில், 990 பேர் தகுதி பெற்றவர்களாக யுபிஎஸ்சி அறிவித்துள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த கீர்த்தி வாசன் என்பவர் அகில இந்திய அளவில் 29 ஆவது இடமும், தமிழக அளவில் முதலிடமும் பிடித்து அசத்தியுள்ளார்.

திருச்சி என்.ஐ.டி.-யில் பி.டெக். (கட்டடவியல்) பட்டதாரியான கீர்த்தி வாசன் தருமபுரியைச் சேர்ந்தவர். இவருடைய தந்தை வெங்கடேஷ்பாபு தருமபுரியில் வர்த்தகராக இருக்கிறார். இவர், யு.பி.எஸ்.சி. குடிமைப் பணித் தேர்வின் மூன்று நிலைகளிலும், முதல் முயற்சியிலேயே தகுதி பெற்று சாதனை படைத்திருக்கிறார்.

இந்நிலையில், இன்று சொந்த ஊரான தர்மபுரிக்கு வந்த கீர்த்திவாசனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 

அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஆர்வம், முயற்சியின் காரணமாக முதல்நிலை, முதன்மை, ஆளுமைத் திறன் தேர்வு என மூன்று நிலைகளிலும் முதல் முயற்சியிலேயே தகுதி பெற்று, இப்போது இந்திய அளவில் 29-ஆவது ரேங்க் பெற்றிருக்கிறேன். இளைஞர்கள் தன்னம்பிக்கையுடன் தங்கள் இலக்கை நோக்கி பயணித்தால் எந்தத் துறையிலும் சாதிக்கலாம் என கூறினார்.

மேலும் சிவில் சர்வீஸ் தேர்வு குறித்த ஆலோசனைக்காக தன்னை அணுகலாம் எனக் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com