புயலால் ஒத்திவைக்கப்பட்ட நீட் தேர்வை சென்னையிலேயே நடத்த வேண்டும்: டாக்டர்கள் சங்கம் கோரிக்கை

"வர்தா' புயலின் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட "நீட்' தேர்வை சென்னையிலேயே நடத்த வேண்டும் என்று சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

"வர்தா' புயலின் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட "நீட்' தேர்வை சென்னையிலேயே நடத்த வேண்டும் என்று சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் வெளியிட்டுள்ள அறிக்கை:
வர்தா புயல் தாக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்த உடனேயே தமிழக பள்ளி, கல்லூரிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஆனால் முதுநிலை மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு ஒத்திவைக்கப்படவில்லை.
புயல் தாக்கிய அன்று காலையும், மாலையும் சென்னையில் நீட் தேர்வுகள் நடத்தப்பட்டன. புயலால் சேதங்கள் ஏற்பட்ட சில மையங்களில் மாலை நேரத் தேர்வுகள் மட்டும் தள்ளி வைக்கப்பட்டன.
மத்திய அரசின் பொறுப்பற்ற செயல்பாட்டால் தேர்வெழுதிய மருத்துவர்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். வெளியூர்களில் இருந்து வந்தவர்கள் போக்குவரத்து பாதிப்பால் மிகவும் இன்னலுற்றனர்.
அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில்தான் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் நடைபெறும். மாணவர் சேர்க்கைக்கு போதுமான கால அவகாசம் இருக்கும்போது இயற்கைப் பேரிடர் காலத்தில் தேர்வை நடத்த வேண்டிய அவசியம் என்ன?
கடந்த ஆண்டு வெள்ளப் பாதிப்பால் ரத்து செய்யப்பட்ட தேர்வுகள் மீண்டும் சென்னையில் நடத்தப்படாமல் வேறு மாநிலங்களில் நடத்தப்பட்டன. அதுபோன்ற முயற்சியை இந்த ஆண்டும் செய்யக்
கூடாது. எனவே, ஒத்திவைக்கப்பட்ட முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வை சென்னையிலேயே நடத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com