ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வு: அரசு சார்பில் ஆளுமைத் திறன் பயிற்சி

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வை எதிர்கொள்ளும் மாணவ -மாணவிகளுக்கு தமிழக அரசு சார்பில் ஆளுமைத் திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வு: அரசு சார்பில் ஆளுமைத் திறன் பயிற்சி

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வை எதிர்கொள்ளும் மாணவ -மாணவிகளுக்கு தமிழக அரசு சார்பில் ஆளுமைத் திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து, தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
குடிமைப் பணிகளுக்கான தேர்வுகளில், முதன்மைத் தேர்வில் தகுதி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த மாணவ -மாணவியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன்படி, அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மையத்தில் மாதிரி ஆளுமைத் தேர்வும், சிறப்பு வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
வரும் ஏப்ரல் 7 -ஆம் தேதி பேராசிரியர் கே.எம்.பதி, ஏப்ரல் 9 -ஆம் தேதி பள்ளிக்கல்வித் துறை செயலாளர் த.உதயச்சந்திரன் ஆகியோர் ஆளுமைத் தேர்வு தொடர்பான சிறப்பு வகுப்புகளை நடத்துகின்றனர். மேலும், ஏப்ரல் 8 முதல் 10 ஆம் தேதிகளில் இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி, இந்திய வருவாய் பணி அலுவலர்களையும், கல்லூரிகளின் பேராசிரியர்களையும் கொண்டு குழு அமைக்கப்பட்டு மாதிரி ஆளுமைத் தேர்வும் நடைபெறவுள்ளது.
ஆளுமைத் தேர்வுக்காக புதுதில்லி செல்லும் மாணவ -மாணவியர்களுக்கு பயணப் படியாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது. மாநில ஆளுமைத் தேர்வு பற்றிய மேலும் விவரங்களை பயிற்சி மைய இணையதளத்தில் (www.civilservicecoaching.com) தெரிந்து கொள்ளலாம். 044-2462 1475 என்ற தொலைபேசி எண்ணிலும் கூடுதல் விவரங்களை பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com