காரைக்குடி பொறியியல் கல்லூரியில் ஏப்.27-இல் வேலைவாய்ப்பு முகாம்

காரைக்குடி அருகே கீரணிப்பட்டியில் உள்ள கிட் அண்ட் கிம் பொறியியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரி வளாகத்தில், ஏப்ரல் 27-ஆம் தேதி (வியாழக்கிழமை) மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவிருக்கிறது.

காரைக்குடி அருகே கீரணிப்பட்டியில் உள்ள கிட் அண்ட் கிம் பொறியியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரி வளாகத்தில், ஏப்ரல் 27-ஆம் தேதி (வியாழக்கிழமை) மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவிருக்கிறது.
   இது குறித்து, அக் கல்லூரியின் தலைவர் வீ. அய்யப்பன் கூறியதாவது: இக்கல்லூரியில் கடந்த ஆண்டு நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் பல்வேறு கல்லூரிகளிலிருந்து பங்கேற்ற மாணவ, மாணவியர்களில் 98 பேர் வேலைவாய்ப்பு பெற்றனர்.
   இந்தாண்டு ஏப்ரல் 27-ஆம் தேதி காலை 10 மணிக்கு கல்லூரி வளாகத்தில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில், சதர்ன் குளோபல், மையாங் சைன் ஆட்டோமோட்டிவ் பிரைவேட் லிமிடெட், ஹெச்சாவேர் டெக்னாலஜிஸ், ரோம் சாப்ட் டெக்னாலஜிஸ், எல் அண்ட் பி சோமப்பா கம்போர்ட் சிஸ்டம்ஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட், ஆக்ஸிஸ் வங்கி, இண்டஸ்-இண்ட் வங்கி, ஸ்பார்கில் சாப்ட் சிஸ்டம்ஸ், ஹேர் ஐடி இண்டியா பிரைவேட் லிமிடெட், வெர்டெக்ஸ், ஹிந்துஜா குளோபல் சொல்யூசன்ஸ், பர்ஸ்ட் சோர்ஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
   2015-2016 இல் முடித்தவர்களும், 2016-2017 இல் முடிக்கவுள்ள பொறியியல் மற்றும் எம்.பி.ஏ. மாணவ, மாணவியர்களும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம். அனுமதி இலவசம். மேலும், இலவசப் பேருந்து வசதி காரைக்குடி பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்களிலிருந்து காலை 9 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
   முகாமில் கலந்துகொள்ளும் மாணவ, மாணவியர் சுயவிவரக் குறிப்பு 6, புகைப்படம் 6 நேரில் கொண்டுவரவேண்டும்.   மேலும், 2017-2018 அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் மே 1-ஆம் தேதி முதல் ஆன்-லைன் மூலமாக பதிவு செய்யப்படுகிறது. கிட் அண்ட் கிம் பொறியியல் கல்லூரியில் சேர்வதற்கான ஆன்-லைன் விண்ணப்பத்தை இலவசமாக பதிவு செய்வதற்கும் மற்றும் பதிவிறக்கும் செய்வதற்கும் வசதி செய்யப்பட்டுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com