நெட் தேர்வுக்கு 11 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: ஆதார் எண் கட்டாயம்  

நவம்பர் மாதம் நடைபெற உள்ள கல்லூரி ஆசிரியர் பணியில் சேருவதற்கான நெட் தகுதித் தேர்வுக்கான நெட் தேர்விற்கு ஆகஸ்ட் 11 விண்ணப்பிக்கலாம் என்று
நெட் தேர்வுக்கு 11 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: ஆதார் எண் கட்டாயம்  


நவம்பர் மாதம் நடைபெற உள்ள கல்லூரி ஆசிரியர் பணியில் சேருவதற்கான நெட் தகுதித் தேர்வுக்கான நெட் தேர்விற்கு ஆகஸ்ட் 11 விண்ணப்பிக்கலாம் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிவித்துள்ளது.

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர்வதற்கும், ஆராய்ச்சி மாணவர்கள் மத்திய அரசின் இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகையை பெறுதற்கும் தேசிய அளவிலான நெட் என்கிற தகுதித்தேர்வை மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ நடத்துகிறது.

இந்தத் தேர்வானது வரும் நவம்பர் மாதம் 5 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.  இதற்கு சி.பி.எஸ்.இ.  http://cbsenet.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் ஆகஸ்ட் 11 முதல் செப்டம்பர் 11 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். செப்டம்பர் 12க்குள் கட்டணம் செலுத்தலாம்.

ஆன்லைன் விண்ணப்பத்தில் ஆதார் எண், பெயர், பிறந்த தேதி, பாலினம் உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுவரை ஆதார் எடுக்காத விண்ணப்பதாரர்கள், உடனடியாக அதற்கு விண்ணப்பிப்பது அவசியமாகும்.

ஆகஸ்ட் 4 ஆம் தேதி இதுகுறித்த முழுமையான அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com