விண்ணப்பித்துவிட்டீர்களா..? வேலை... வேலை... வேலை...

எம்.எஸ்சி இயற்பியல் அல்லது பி.ஈ./ பி.டெக் (மெக்கானிக்கல்எஞ்சினியரிங்) அல்லது எனர்ஜிடெக்னாலஜியில்
விண்ணப்பித்துவிட்டீர்களா..? வேலை... வேலை... வேலை...

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலை
பணி: புராஜெக்ட் அசிஸ்டென்ட்  
காலியிடம்: 1 
தகுதி: எம்.எஸ்சி இயற்பியல் அல்லது பி.ஈ./ பி.டெக் (மெக்கானிக்கல்எஞ்சினியரிங்) அல்லது எனர்ஜிடெக்னாலஜியில் எஞ்சினியரிங் படிப்புடன் ஓராண்டு அனுபவம் வேண்டும். அல்லது எம்.டெக் (மெக்கானிக்கல் எஞ்சினியரிங் / எனர்ஜி டெக்னாலஜி) படித்திருக்க வேண்டும்.  
சம்பளம்: ரூ.16,000. 
விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். 
முகவரி: Dr. A. Sreekumar, Asst. Professor, Centre for Green Energy Technology,  Madanjeet Singh School of Green Energy Technologies,  Pondicherry University (A Central University), R.V. Nagar, Kalapet, Pondicherry - 605014.  Tel.: +91-413-2654314. 
மேலும் விவரங்களுக்கு: http://www.pondiuni.edu.in/sites/default/files/Recruitment%20-GET.pdf என்ற இணைய தளத்தைப் பாருங்கள். 
விண்ணப்பம் சென்று சேர கடைசித் தேதி: 29-12-2017.

இந்திய இடம்பெயர்வு மையத்தில் பயிற்சி 
பணி: Internship 
காலியிடங்கள்: 2 
சம்பளம்: ரூ.30,000 
தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சர்வதேச இடம்பெயர்வுத்துறையில் பணி அனுபவம் மற்றும் குறிப்பிடப்பட்டுள்ள கல்வித் தகுதியைவிட உயர் கல்வித் தகுதி பெற்றிருப்பவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.  
வயது வரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: icm@mea.gov.in  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அறிவிப்பில் கேட்கப்பட்டுள்ள விவரங்களையும், சுயவிவரக் குறிப்பையும், அண்மையில் மேற்கொண்ட ஆராய்ச்சிகள் பற்றிய விவரங்களையும் அனுப்பி வைக்க வேண்டும். 
மேலும் விவரங்களுக்கு: http://mea.gov.in/Images/attach/ToR_Nov_2017.pdf என்ற இணையதளத்தைப் பாருங்கள். விண்ணப்பிக்க கடைசித் தேதி: 29-12-2017. 

தென்னிந்திய வங்கியில் வேலை 
பணி: Probationary Clerk 
காலியிடங்கள்: 468 (கேரளம்-340, தமிழ்நாடு-68, ஆந்திரப் பிரதேசம் & தெலங்கானா-35, தில்லி என்சிஆர்-25) 
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  
வயது வரம்பு: 26 வயதுக்குள் இருக்க வேண்டும்.  
விண்ணப்பிக்கும் முறை: www.southindianbank.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றில் தேர்ச்சி பெறும் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 
மேலும் விவரங்களுக்கு: https://www.southindianbank.com/UserFiles/file/Notification_recruitment_clerks_2017-2018.pdf என்ற இணையதளத்தைப் பாருங்கள்.  
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 30-12-2017. 

இந்தியன் வங்கியில் வேலை 
பணி: SECURITY GUARD CUM PEON  
காலியிடங்கள்: 64 (தமிழ்நாட்டில் 34) 
தகுதி: பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
பிற தகுதிகள்: இந்திய ராணுவம்/ விமானப் படை/ கடற்படையில் பணிபுரிந்திருக்க வேண்டும். பணி செய்ய விருப்பப்படும் மாநிலத்தின் வட்டார மொழியில் பேச, எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.  
வயது வரம்பு: 18 வயதிலிருந்து 26 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு உச்சபட்ச வயது வரம்பில் விலக்கு உண்டு. 
தேர்வு செய்யப்படும் முறை: உடல் தகுதித் தேர்வு, எழுத்துத் தேர்வு, கல்வித் தகுதி ஆகியவற்றின் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பிக்கும் முறை: www.indianbank.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான ஆவணங்கள், சான்றிதழ்களின் நகல்களுடன் பதிவுத் தபால்/ விரைவுத் தபால் மூலம் அனுப்ப வேண்டும்.  
முகவரி: INDIAN BANK, CORPORATE OFFICE, 254-260, AVVAI SHANMUGAM SALAI, ROYAPETTAH, CHENNAI - 600 014. PHONE: 044-28134396. 
மேலும் விவரங்களுக்கு: http://www.indianbank.in/pdfs/hrm_Detail_advertisement.pdf   என்ற இணையதளத்தைப் பாருங்கள். விண்ணப்பம் சென்று சேர கடைசித் தேதி: 30-12-2017.

இந்திய தபால்துறையில் வேலை 
பணி: MV Mechanic 
காலியிடங்கள்: 1
வயது வரம்பு: 18 வயதிலிருந்து 30 வயதுக்குள் இருக்க வேண்டும். 
தகுதி: அரசால் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்பயிற்சி நிறுவனத்தில் மேற்கண்ட துறையில் சான்றிதழ் படிப்பு அல்லது 8-ஆம் வகுப்பு தேர்ச்சிக்குப் பிறகு மேற்கண்ட துறையில் ஓராண்டு அனுபவம், கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: மாதிரி விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் கீழ்க்காணும் முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.
முகவரி: Manager,  Mail Motor Service, C.T.O. Compound, Tallakulam, Madurai -625002.
மேலும் விவரங்களுக்கு: http://www.tamilnadupost.nic.in/rec/MVMech08122017.pdf என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
விண்ணப்பம் சென்று சேர கடைசித் தேதி: 01.01.2018 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com