2017-ஆம் ஆண்டின் பிரபலங்கள் மறைவு

பிரபல பாலிவுட் நடிகர் ஓம் புரி (66) மாரடைப்பால் காலமானார்.
2017-ஆம் ஆண்டின் பிரபலங்கள் மறைவு

ஜன. 1: பிரபல பாலிவுட் நடிகர் ஓம் புரி (66) மாரடைப்பால் காலமானார்.
ஜன. 14: தமிழக முன்னாள் ஆளுநரும், பஞ்சாப் முன்னாள் முதல்வருமான சுர்ஜித் சிங் பர்னாலா (91) மறைவு.
பிப். 1: இந்திய தேசிய முஸ்லிம் லீக் தேசியத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான இ.அகமது (67) காலமானார். நாடாளுமன்றத்தில் இருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
பிப். 6: "யுனெஸ்கோ கூரியர்' தமிழ்ப் பத்திரிகை ஆசிரியர் மணவை முஸ்தஃபா (78) காலமானார்.
பிப். 19: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அல்தமஸ் கபீர் (68) சிறுநீரக செயலிழப்பு காரணமாக உயிரிழந்தார்.
மார்ச் 6: சோசலிஷத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ரபி ரே (91) காலமானார்.
மார்ச் 18: நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் சந்திரஹாசன் (82) லண்டனில் மாரடைப்பால் உயிரிழந்தார்.
மார்ச் 23: பிரபல தமிழ் எழுத்தாளர் அசோகமித்ரன் (85) மறைவு.
ஏப். 16: தமிழ் எழுத்தாளர் மா.அரங்கநாதன் (83) சென்னையில் காலமானார்.
ஏப். 27: பழம் பெரும் பாலிவுட் நடிகர் வினோத் கன்னா (70) காலமானார்.
மே 11: ராம்கோ குழுமத்தின் தலைவர் பி.ஆர்.ராமசுப்பிரமணிய ராஜா மறைவு.
மே 18: மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அனில் மாதவ் தவே (60) மாரடைப்பால் உயிரிழந்தார்.
மே 30: முன்னாள் மத்திய அமைச்சரும், தெலுங்கு திரைப்பட இயக்குநருமான தாசரி நாராயண ராவ் (75) உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் 125 படங்களை இயக்கிய கின்னஸ் சாதனையாளர் அவர்.
ஜூன் 6: திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவரும், மூத்த நாடாளுமன்றவாதியுமான இரா. செழியன் (94) மறைவு.
ஜூன் 29: கந்த சஷ்டி கவசம் பாடல் புகழ் சூலமங்கலம் சகோதரிகளில் மூத்தவரான ஆர்.ஜெயலட்சுமி (80) காலமானார்.
ஜூலை 16: சிக்கிமில் தொடர்ந்து 3 முறை முதல்வராக இருந்து சாதனை படைத்த நர் பகதூர் பண்டாரி (77) காலமானார்.
ஜூலை 24: இந்திய செயற்கைக்கோள் திட்டங்களின் தந்தை என்று போற்றப்பட்டும் உடுப்பி ராமச்சந்திர ராவ் (85) மறைவு.
ஜூலை 27: காங்கிரஸ் மூத்த தலைவரும், கர்நாடக முன்னாள் முதல்வருமான தரம் சிங் (80) மாரடைப்பால் உயிரிழந்தார்.
செப். 19: ரூ.29,500 கோடி மதிப்புள்ள முருகப்பா குழுமத்தின் தலைவர் எம்.வி. முருகப்பா (81) காலமானார்.
அக். 24: அவளோட ராவுகள், தேவஸ்வரம் ஆகிய படங்களை இயக்கிய பிரபல மலையாள இயக்குநர் ஐ.வி.சசி (69) காலமானார். 
நவ. 7: தமிழறிஞரும், பெரியாரியவாதியுமான மா.நன்னன் (94) மறைவு.
நவ. 20: நீண்ட காலமாக கோமா நிலையில் இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி (72) காலமானார்.
டிச. 4: பழம்பெரும் நடிகர் சசி கபூர் (79) உயிரிழந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com