விண்ணப்பித்துவிட்டீர்களா..? சட்டப்பணிகள் தன்னார்வ ஆணையத்தில் வேலை

திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணையக்குழுவில் பணிபுரியவும். சட்ட அறிவை பாமர மக்களுக்கு எடுத்துரைப்பதற்காகவும்,

திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணையக்குழுவில் பணிபுரியவும். சட்ட அறிவை பாமர மக்களுக்கு எடுத்துரைப்பதற்காகவும், சட்டம் சார்ந்த தன்னார்வ தொண்டர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் வரும் 28 ஆம் தேதிக்குள் அஞ்சலிலோ, நேரிலோ விண்ணப்பிக்கலாம்.

பணி: Para Legal Volunteers

மொத்த காலியிடங்கள்: 175

காலியிடங்கள் ஏற்பட்டுள்ள பகுதிகள்:
1. மாவட்ட சட்டப் பணிகள் ஆணையக்குழு - 50
2. பல்லடம் - 25
3. தாராபுரம் - 25
4. உடுமலைப்பேட்டை - 25
5. அவினாசி - 25
6. காங்கேயம் - 25

சம்பளம்: தினசரி ரூ.250 வழங்கப்படும்.

தகுதி: குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். சேவை மனப்பான்மையுடையவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பம் உள்ளவர்கள் தங்களுக்கு அருகில் உள்ள நீதிமன்றங்களில் இயங்கி வரும் சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகங்களில் விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நேரிலோ, அஞ்சல் மூலமோ 28 ஆம் தேதிக்குள் வந்து சேர வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ecourts.gov.in/tn/triuppur என்ற இணையதளத்தை பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com