ஆசிரியர் தகுதித் தேர்வு வழிகாட்டி: தமிழக நாடும் நகரமும்

ஆதியில் மக்கள் வாழும் நிலத்தை குறிப்பதற்கு வழங்கப்பட்ட சொல் - நாடு
ஆசிரியர் தகுதித் தேர்வு வழிகாட்டி: தமிழக நாடும் நகரமும்

- ஆதியில் மக்கள் வாழும் நிலத்தை குறிப்பதற்கு வழங்கப்பட்ட சொல் - நாடு
- மூவேந்தர்களின் ஆட்சிக்குட்பட்ட தமிழ்நாட்டின் பகுதிகள் அவரவர் பெயராலேயே சேரநாடு, சோழநாடு, பாண்டிய நாடு என்று அழைக்கப்பட்டன.
- நாளடைவில் நாடுகளின் உட்பிரிவுகளும் எவ்வாறு அழைக்கப்பட்டது? - நாடு, சான்றுகள் - கொங்குநாடு, தொண்டை நாடு
- ஆம்மாழ்வார் பிறந்த ஊரான குருகூர் தற்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது - ஆழ்வார் திருநகரி
- முதல் ஆழ்வார்களால் பாடப்பட்ட ஊர் எது? - திருவல்லிக்கேணி
- ஊரும் பேரும் என்ற நூலின் ஆசிரியர் யார்? - ரா.பி. சேதுப்பிள்ளை
- புரம் என்னும் சொல் -------- ஊர்களைக் குறிப்பதாகும். - சிறந்த
- முன்னாளில் முறப்புநாடு என்பது பாண்டி மண்டலத்தைச் சேர்ந்த நாடுகளில் ஒன்று
- பொருநையாற்றின் (தாமிரபரணி ஆறு) கரையிலுள்ள ஒரு சிற்றூரின் பெயர் - முறப்ப நாடு
- பொருநையாற்றின் எதிரே மற்றொரு கரையிலுள்ள மற்றொரு சிற்றூர் - வல்லநாடு
- மாயவரத்திற்கு அடுத்ததாக உள்ள ஓரூர் எவ்வாறு வழங்கப்படுகிறது - கொரநாடு
- கூறைநாடு என்பது எவ்வாறு மருவிற்று? - கொரநாடு
- பட்டி என்பது எதைக் குறிக்கும்? - ஊர்
- விருதுப்பட்டியின் தற்போதைய பெயர் - விருதுநகர்
- மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்சுரம் என்னும் சிவாலயம் பற்றி பாடியவர் - திருஞானசம்பந்தர்
- சிற்ந்த ஊர்களைக் குறிக்கும் சொல் - புரம்
- கடற்கரையில் உருவாகும் நகரம் - பட்டினம்
- கடற்கரைச் சிற்றூர்களின் பெயர் - பாக்கம்
- புலம் என்னும் சொல் குறிப்பது - நிலத்தை
- நெய்தல் நிலத்தில் அமைந்த வாழ்விடங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது? - குப்பம்
- பட்டுகோட்டை வட்டத்தில் கானாடும், மதுரங்க வட்டத்தில் தென்னாடும் உள்ளன.
- அல்லிக்கேணி என்பது - அல்லிக்குளம்.
- அங்கே பெருமாள் கோவில் கொண்டமையால் திரு என்னும் அடைமொழி சேர்ந்து - திவல்லிக்கேணி ஆயிற்று.
- திருமயிலைக்கு அருகேயுள்ள திருவல்லிக்கேணி, முதல் ஆழ்வார்களால் பாடப்பெற்றது அவ்வூரின்  பெயர் அல்லிக்கேணி என்பதாகும்.

ஊரும் பேரும்:
- மலையைக் குறிக்கும் வடசொல் எது? - கிரி
- குறிஞ்சி என்னும் சொல் தற்போது மருவி எவ்வாறு கூறப்படுகிறது? - குறிச்சி
- ஆடு, மாடுகள் அடைக்கப்படுமிடும் எவ்வாறு அழைக்கப்பட்டது? - பட்டி
- கோவன்புத்தூர் என்னும் ஊர் தற்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது? - கோயமுத்தூர்
- மதிரை என்னும் பெயர் மருதையாகி தற்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது? - மதுரை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com