ஆசிரியர் தகுதித் தேர்வு வழிகாட்டி: நோய் தீர்க்கும் மூலிகைகள்

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்று கூறும் நூல்கள் - புறநானூறு, மணிமேகலை
ஆசிரியர் தகுதித் தேர்வு வழிகாட்டி: நோய் தீர்க்கும் மூலிகைகள்

உணவே மருந்து மற்றும் நோய் தீர்க்கும் மூலிகைகள்
- உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்று கூறும் நூல்கள் - புறநானூறு, மணிமேகலை
- உணவே மருந்தாகும் என்று கூறும் நூல் - திருக்குறள்.
- அறுசுவையின் பயன்கள்:
- இனிப்பு - வளம்
- துவர்ப்பு - ஆற்றல்
- கைப்பு - மென்னை
- கார்ப்பு - உணர்வு
- உவர்ப்பு - தெளிவு
- புளிப்பு - இனிமை
- பசிப்பிணிக்கு உணவே மருந்து
- நோய்க்கு முதல் காரணம் - உப்பு
- அருந்திய அற்றது போற்றி உணின் என்று கூறும் நூல் - திருக்குறள்
- மனிதனின் அடிப்படை தேவைகளுள் முதன்மையானது - உணவு
- உடலுக்கு வலிமையையும், வளர்ச்சியையும் அளிப்பது - உணவு
- பசியின் கொடுமையை பசிப்பிணி என்றும், பாவி என்றும் கூறும் நூல் - மணிமேகலை
- நெஞ்சிலுள்ள சளியை நீக்குவது - மஞ்சள்
- பித்தத்தைப் போக்குவது - கொத்தமல்லி
- வயிற்றுச் சூட்டைத் தணிப்பது - சீரகம்
- தொண்டைக் கட்டைத் தொலைப்பது - மிளகு
- வலியகற்றி, வயிற்று அலைச்சலை நீக்கி, பசியை மிகுப்பது - பூண்டு
- குளிர்ச்சியை உண்டாக்கிக் குருதியைக் தூய்மைப்படுத்துவது - வெங்காயம்
- பித்தத்தை ஒடுக்கி, காய்ச்சலை கண்டிப்பது - இஞ்சி
- நீர்க்கோவையை நீக்குவது - தேங்காய்
- மணமூட்டி, உணவு விருப்பை உண்டாக்குவது - கறிவேப்பிலை
- கண் குளிர்ச்சியும், அறிவு தெளிவும் உண்டாக்குவது - நல்லெண்ணெய்
- உடலுக்கு வலுவூட்டவும், கழிவை அகற்றவும் உதவுவது - கீரை
- சூட்டைத் தணித்துச் செரிமான ஆற்றலை அதிகரிக்கச் செய்வது - சீரகம் பூண்டு கலந்த மிளகு நீர்
- குளிர்ச்சி தந்து, பித்தம் போக்குவது - எலுமிச்சை
- முழுமையாக தவிர்க்க வேண்டிய பொருட்கள் - ஊறுகாய், அப்பளம், வடவம், கருவாடு, முந்தரி பருப்பு, வறுத்த உருளைச் சீவல், புளித்த மோர்
- நீரின்றி அமையது உலகம் என்பது - வள்ளுவம்
- மீதூண் விரும்பேல் என்று கூறியவர் - ஒளவையார்
- "காலை மாலை உலாவி நிதம் காற்று வாங்கி வருவோரின் காலைத் தொட்டுக் கும்பிட்டுக் காலன் ஓடிப் போவானே" என்று கூறியவர் - கவிமணி
- உடம்பார் அழியின் உயிரார் அழிவர் என்று கூறியவர் - திருமூலர்

நோய் நீக்கும் மூலிகைகள்:
- மஞ்சட்காமாலையை போக்க உதவும் மூலிகை - கீழாநெல்லி
- கீழாநெல்லியின் வேறு பெயர்கள் - கீழ்க்காய் நெல்லி, கீழ்வாய் நெல்லி
- கீழாநெல்லி இலைகளை கற்கண்டுடன் அரைத்து உண்டால் நீங்குவது - சிறுநீர் தொடர்பான நோய்
- ஞானப்பச்சிலை - தூதுவளை
- தூதுவளை என்பதின் வேறு பெயர்கள் - தூதுவளை, சிங்கவல்லி
- தூதுவளையை ஞானப்பச்சிலை என்று கூறியவர் - வள்ளலார்.
- மேனி துலக்க குப்பை மேனி என்பது - பழமொழி
- மலப்புழுக்களை வெளியேற்றவும், வயிறு தூய்மையாக்கவும் பசியைத் தூண்டவும் பயன்படும் செடி - குப்பை மேனி
- நச்சுக் கடிகளுக்கும் நல்ல மருந்தாக விளங்கும் மூலிகைச் செடி - குப்பை மேனி
- கற்றாழை என்ற மூலிகையின் வேறு பெயர் - குமரி
- மருந்தாகப் பயன்படும் கற்றாழை - சோற்றுக் கற்றாழை
- கற்றாவையின் சோற்றுப் பகுதியை பசும்பாலுடன் சேர்த்து சாப்பிட்டால் நீங்குவது - மூலச்சூடு தணியும்
- குமரி கண்ட நோய்க்கு குமரி கொடு என்பது - வழக்கு
- வீக்கத்தைக் குறைக்க, கண்பார்வையை ஒழுங்குபடுத்த, உடலை வலுவாக்க பயன்படுவது - முருங்கைப் பட்டை
- முருங்கைப் பட்டையை அரைத்துச் தடவினால் நீங்குவது - முறிந்த எலும்பு விரைவில் கூடும்
- கண்பார்வையை ஒழுங்கு படுத்தவும், உடலை வலுவாக்கவும் பயன்படுவது - முருங்கை இலை
- கறிவேப்பிலையை கழுவி சிறிது சிறிதாக வாயில் போட்டு மென்று விழுங்கினால் - சீதபேதி
- உணவில் சேரும் சிறு நச்சுத் தன்மையை முறிக்கும் தன்மையுடையது - கறிவேப்பிலை
- இரத்த சோகை, செரிமானக் கோளாறு, மஞ்சள் காமாலை முதலிய நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுவது - கரிசலாங்கண்ணி
- கண்பார்வையை தெளிவாக்கவும், நரையைப் போக்கவும் பயன்படுவது - கரிசலாங்கண்ணி
- கரிசலாங்கண்ணிக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள்: கரிசாலை, கையாந்தகரை, பிருங்கராசம், தேகராசம்
- வாய்ப்புண், குடற்புண்ணை குணமாக்குவது - மணத்தக்காளி கீரை
- இருமலைப் போக்க பயன்படுவது - முசுமுசுக்கை செடி
- பல் சார்ந்த நோய்களை குணமாக்கப் பயன்படுவது - அகத்திக்கீரை
- நினைவாற்றல் பெருக உதவுவது - வல்லாரை
- வேப்பங்கொழுந்தினை காலையில் உண்டு வந்தால் நீங்குவது - மார்புச் சளி
- அம்மையால் வந்த வெப்ப நோய் அகலப் பயன்படுவது - வேப்பிலை
- துளசிசெடியின் இலைகளை நீரிலிட்டு கொதிக்கச் செய்து ஆவி பிடித்தால் நீங்குவது - மார்புச் சளி, நீர்க்கோவை, தலைவலி
- எலுமிச்சை செடியின் இலைகளை எலுமிச்ச பழச்சாற்றுடன் அரைத்துப் போட்டால் நீங்குவது - படை
- துளசி விதைகளை பொடி செய்து உண்டால் அடங்குவது - உடற்சூடு, நீரெரிச்சல்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com