பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வு: அறிவியல், உளவியல் பாட வினாக்கள் கடினம்

பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வில் உளவியல், அறிவியல் பாட வினாக்கள் மிகவும் கடினமாக இருந்ததாக தேர்வு எழுதியவர்கள் தெரிவித்தனர்.
சென்னை விருகம்பாக்கத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் அன்புச் செல்வன்.
சென்னை விருகம்பாக்கத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் அன்புச் செல்வன்.

பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வில் உளவியல், அறிவியல் பாட வினாக்கள் மிகவும் கடினமாக இருந்ததாக தேர்வு எழுதியவர்கள் தெரிவித்தனர்.
இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வைத் தொடர்ந்து, பட்டதாரி ஆசிரி யர்களுக்கான தகுதித்தேர்வு (தாள்-2) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழகம் முழுவதும் மொத்தம் 1,263 மையங்களில் நடைபெற்ற இந்தத் தேர்வை 5 லட்சத்து 2 ஆயிரம் பேர் எழுதினர்.
இத்தேர்வு சமூக அறிவியல், கணித அறிவியல் என இரு பிரிவினருக்கான வினாத்தாள்களைக் கொண்டது. இதில் தமிழ், ஆங்கிலம், உளவியல் ஆகிய 3 பிரிவுகளில் உள்ள 90 கேள்விகள் இரு பிரிவினருக்கும் பொதுவானதாகும். சமூக அறிவியல் பாடத்தைத் தேர்வு செய்தவர்களுக்கு அது தொடர்பாக 60 கேள்விகளும், கணித அறிவியல் பாடத்தைத் தேர்வு செய்தவர்களுக்கு கணிதம்-30, அறிவியல்-30 வினாக்களும் கேட்கப்பட்டிருந்தன.
பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து சென்னையைச் சேர்ந்த கே.மணிமொழி, திருப்பூரைச் சேர்ந்த பி.சங்கீதா, எஸ்.கவிதா, வேலூரைச் சேர்ந்த ப.சண்முகவடிவேல் உள்ளிட்டோர் கூறியது:
உளவியல் பிரிவில் இடம்பெற்றிருந்த 30 வினாக்களில் திடீரென மழலைகள் தூக்கத்தில் இறப்பதற்கான காரணம் என்ன? என்பது உள்பட 10-க்கும் மேற்பட்ட வினாக்கள் புத்தகத்திலிருந்து கேட்காமல், வெளியிலிருந்து கேட்கப்பட்டதால் கடினமாக இருந்தது.
அறிவியல் பாடத்தில், தாவரங்களில் காணப்படும் உறக்க அசைவுகளுக்கான மறு பெயர் என்ன என்பது உள்பட பெரும்பாலான வினாக்களுக்கு யோசித்து பதிலளிக்க வேண்டியிருந்தது.
சமூக அறிவியல் பாடப் பகுதியில், உலகில் முதன் முதலில் ஏவப்பட்ட வானிலை செயற்கைக் கோள் எது, தமிழ் பாடத்தில் 196 என்ற எண்ணுக்கான தமிழ் எண்ணை தேர்வு செய் என்பது உள்பட பெரும்பாலான கேள்விகள் எளிமையாக இருந்தன.
கணிதம், ஆங்கிலத்தில் கேட்கப்பட்டிருந்த வினாக்கள் ஒரளவுக்கு பதிலளிக்கக் கூடியதாக இருந்தது. பொதுவாக இந்தத் தேர்வு கடினமாகவே இருந்தது. இருப்பினும் தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண்களைப் பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்றனர்.
சென்னையில் 1,728 பேர் வரவில்லை: சென்னை மாவட்டத்தில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்த 31,235 தேர்வர்களில் 29,507 பேர் தேர்வெழுதினர். 1,728 பேர் தேர்வுக்கு வரவில்லை. சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள பாலயோக் மெட்ரிகுலேஷன் பள்ளி உள்பட பல மையங்களில் நடைபெற்ற தேர்வை மாவட்ட ஆட்சியர் அன்புச் செல்வன் ஆய்வு செய்தார். சென்னை அரும்பாக்கம் அரசுமேல்நிலைப்பள்ளித் தேர்வு மையத்தில் அனைவருக்கும் இடைநிலைக்கல்வி இயக்க திட்ட இயக்குநர் எஸ்.கண்ணப்பன் ஆய்வு மேற்கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com