வேலை...வேலை...வேலை...

ஆவின் நிறுவனத்தில் வேலை,  ரிசர்வ் வங்கியில் வேலை, RITES நிறுவனத்தில் வேலை 
வேலை...வேலை...வேலை...

ஆவின் நிறுவனத்தில் வேலை  
பணி:   Manager (Engg) Dy. Manager (Dairying), Private Secretary, Extension Officer Grade-2,  Executive (Office), Jr. Executive (Office), Light Vehicle Driver,
Technician (©¬ÜLs: Electrical, Boiler, Refrigeration) 
தகுதி: Manager (Engg) Dy. Manager (Dairying), Private Secretary, Extension Officer Grade-2 , Jr. Executive (Office) ஆகிய பதவிகளுக்கு குறைந்தபட்சம்
சம்பந்தப்பட்ட பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.  .  Executive (Office) பதவிக்கு முதுநிலைப் பட்டப் படிப்பை சம்பந்தப்பட்ட பிரிவில் முடித்திருக்க
வேண்டும்.  Light Vehicle Driver பதவிக்கு குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். டிரைவிங் லைசென்ஸ் பெற்றிருக்க வேண்டும்.  
Technician பதவிக்கு  10 ஆம் வகுப்பில் தேர்ச்சி மற்றும் சம்பந்தப்பட்ட பிரிவில் ITI சர்டிபிகேட் பெற்றிருக்க வேண்டும். 
வயது வரம்பு:  18  வயது முதல்  30 வயதுக்குள் இருக்க வேண்டும்., (குறிப்பிட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு  உண்டு).  
விண்ணப்பக் கட்டணம்:  ரூ.250 (குறிப்பிட்ட பிரிவினருக்கு ரூ.100 ) 
விண்ணப்பிக்கும் முறை:  www.aavinmilk.com., www.aavinthanjavur.com ஆகிய இணையதளங்களில்  உள்ள   விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து,
பூர்த்தி செய்து,   தேவையான சான்றிதழ்களின் நகல்கள் இணைத்து கீழ்க்காணும் முகவரிக்கு  பதிவுத் தபால் அல்லது விரைவு அஞ்சல்  மூலம் அனுப்பி
வைக்க வேண்டும்.   
முகவரி:  General Manager, Thanjavur District Cooperative Milk Producers' Union Ltd., Nanjikkottai Road, Thanjavur, PIN Code :- 613 006  
 தேர்வு செய்யப்படும் முறை:  எழுத்துத் தேர்வு, நேர்காணல்  மூலம்  தகுதியான  நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.  
மேலும் விவரங்களுக்கு: http://www.aavinthanjavur.com/downloads/employment-notification.pdf என்ற இணையதளத்தைப்  பாருங்கள். 
விண்ணப்பங்கள் சென்று சேரக் கடைசித் தேதி:  10.11.2017 

ரிசர்வ் வங்கியில் வேலை 
பணி:  Assistant  
மொத்த காலியிடங்கள்:  623
தகுதி:  ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 50 சதவீத  மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; அத்துடன், கணினியில் (word processing)
போதுமான அறிவு பெற்றிருக்கவேண்டும்.
வயது வரம்பு:  20 வயது முதல் 28 வயதுக்குள் இருக்கவேண்டும்.  (குறிப்பிட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு  உண்டு). 
விண்ணப்பக் கட்டணம்:  ரூ.450 (குறிப்பிட்ட பிரிவினருக்கு ரூ.50 ) 
விண்ணப்பிக்கும் முறை: http://www.rbi.org என்ற இணையதளத்தில் Recruitment for the post of Assistant’’ என்ற பகுதியை "கிளிக்' செய்து, ஆன்லைன்
முறையில், போட்டோ, கையொப்பம் அப்-லோடு செய்து விண்ணப்பிக்கவேண்டும்.  
தேர்வு செய்யப்படும் முறை:  இரண்டு கட்ட எழுத்துத் தேர்வு, கணினி ஆற்றல், ஆங்கில மொழித்திறன், எண்ணியல், பொது விழிப்புணர்வு ஆகியவற்றின்
அடிப்படையில் தகுதி வாய்ந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 
மேலும் விவரங்களுக்கு: https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/ADVT8E5DE08695784EAA 813D96BE27F50A3B.PDF என்ற இணையதளத்தைப்பாருங்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி:  10.11.2017

RITES நிறுவனத்தில் வேலை 
பணி:  Joint General Manager (Civil), Deputy General Manager (Civil), Engineer (Civil)
மொத்த காலியிடங்கள்: 15
தகுதி:    சிவில் என்ஜினியரிங் பட்டப் படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; அத்துடன் ரயில்வே தொடர்புடைய துறைகளில் Joint General Manager பதவிக்கு 15 ஆண்டுகள் பணி அனுபவம்,  Deputy General Manager பதவிக்கு 10 ஆண்டுகள் பணி அனுபவம்,  Engineer பதவிக்கு 5 ஆண்டுகள் பணி
அனுபவம் தேவைப்படும். 
வயது வரம்பு:  54 வயதுக்குள் இருக்க வேண்டும். (குறிப்பிட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு). 
விண்ணப்பிக்கும் முறை:  ஆன்லைன் மூலம் http://www.rites.com  என்ற இணையதளத்தில் பதிவு செய்து, அதில் உள்ள   விண்ணப்பத்தைப்  பூர்த்தி செய்து, பிரிண்ட்-அவுட் எடுத்து தேவையான சான்றிதழ்களின் நகல்கள் இணைத்து கீழ்க்காணும் முகவரிக்குத் தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.  
முகவரி:  Assistant Manager (P)/Rectt., RITES Ltd., RITES Bhawan, Plot No.1, Sector-29, Gurgaon – 122001, Haryana
தேர்வு செய்யப்படும் முறை:  எழுத்துத் தேர்வு மற்றும் ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் நடைபெறும் நேர்காணல், உடல் தகுதித் திறன் மருத்துவச் சான்று
ஆகியவை மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.  
மேலும் விவரங்களுக்கு:  http://rites.com/web/images/stories/uploadVacancy/Pune%20Metro%20Civil%20contract%20pay%20scale%20ad%20final%2017%2010%202017.pdf  என்ற இணையதளத்தைப்  பாருங்கள். 
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி:  14.11.2017
பிரிண்ட்-அவுட் விண்ணப்பங்கள் சென்று சேரக் கடைசித் தேதி:  22.11.2017 

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை  
பணி:  Trade Apprentice (பிரிவுகள்: Fitter, Electrician, Electronic Mechanic, Instrument Mechanic, Laboratory Assistant) 
மொத்த காலியிடங்கள்: தென் மாநிலங்கள்-354  (தமிழ்நாடு - புதுச்சேரி - 153)
தகுதி:  Fitter, Electrician, Electronic Mechanic, Instrument Mechanic ஆகிய பணிகளுக்கு, பள்ளிப் படிப்பு முடித்து, தொடர்புடைய பிரிவில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்று ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
Laboratory Assistant பணிக்கு,  B.Sc பட்டப்படிப்பை Physics, Maths, Chemistry/Industrial Chemistry ஆகிய பிரிவுகளில் படித்து குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:  18 வயது முதல் 24 வயதுக்குள் இருக்கவேண்டும்.  (குறிப்பிட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு  உண்டு). 
விண்ணப்பிக்கும் முறை:  www.iocl.com(Careers-> Latest Job Opening-> Engagement of Apprentices in Southern Region என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை:  எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
(எழுத்துத் தேர்வு நடைபெறும் இடங்கள்: Chennai, Hyderabad, Vijaywada, Cochin, Bangalore).
மேலும் விவரங்களுக்கு: https://www.iocl.com/download/Advt-SRO-Apprentice-FY-2017-18.pdf என்ற இணையதளத்தைப்  பாருங்கள். 
கடைசித் தேதி:  15.11.2017 
தொகுப்பு:  ரவி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com