இந்திய கப்பற்படையில் தொழிற் பயிற்சி: ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

இந்திய கப்பற்படையில் அளிக்கப்பட உள்ள தொழிற்பழகுநர் பயிற்சிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட ஐடிஐ முடித்த இளைஞர்களிடமிருந்து

இந்திய கப்பற்படையில் அளிக்கப்பட உள்ள தொழிற்பழகுநர் பயிற்சிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட ஐடிஐ முடித்த இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 274

பணி:   எலெக்ட்ரிஷியன், எலெக்ட்ரோ பிளேட்டர் , எலெக்ட்ரானிக்ஸ் மெக்கானிக் , பிட்டர்,   இன்ஸ்ட்ரூமெண்ட் மெக்கானிக் , மெஷினிஸ்ட், மெக்கானிக் மெஷின் டூல் மெயின்டனன்ஸ் (எம்எம்டிஎம்) , பெயிண்டர் , பேட்டர்ன் மேக்கர், ஆர் அண்டு ஏ.சி. மெக்கானிக், வெல்டர் (கேஸ், எலெக்ட்ரிக் , கார்பெண்டர்,  ஃபெளண்ட்ரிமேன் , ஃபார்கர் & ஹூட் ட்ரீட்டர் (எஃப்ஹெச்டி), மெக்கானிக் (டீசல்), ஷீட் மெட்டல் வொர்க்கர் , பைப் பிட்டர்

தகுதி: பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்வுகளில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ஐ.டி.ஐ பிரிவில் 65 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.indiannavy.nic.in/node/977  என்ற இணையதளத்தின் மூலமாக விண்ணப்பதாரர்களின் விவரங்களைப் பதிவு செய்து, விண்ணப்பத்தை அனுப்பி வைக்கவும். பின்னர், விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யவும். மேலும், விளம்பரத்தின் Annexure - I இல் வைக்கப்பட்டுள்ள ஹால் டிக்கெட்டை இரண்டு முறை பிரிண்ட் எடுத்து அவற்றில் சமீபத்தில் எடுக்கப்பட்ட 2 பாஸ்போர்ட் புகைப்படங்களை இணைத்து, அவற்றையும் 
பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பம்,  Annexure - I-இல் பாகம் - III-இல் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான ஆவணங்களையும் இணைத்து, ஸ்பீட் போஸ்ட் மூலம் 12.12.2017க்குள் விசாகபட்டினத்துக்கு அனுப்பி வைக்கவும்.

முகவரி: The Officer-In-Charge (For Apprenticeship), Naval Dockyard Apprentices  School, VM Naval Base S.O., P.O., Visakhapatnam - 530 014, Andhra Pradesh.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.12.2017. 

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி:  12.12.2017

மேலும் விவரங்களுக்கு: https://www.indiannavy.nic.in/sites/default/files/Attachment_1.pdf  என்ற இணையதளத்தைப் பாருங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com