டிஎன்பிஎஸ்சி தேர்வு: இவர்களின் சிறப்புப் பெயர்கள் உங்களுக்குத் தெரியுமா? 

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுகளுக்கான வினா-விடை - 5-வது பதிவில் சான்றோர்களின் சிறப்புப் பெயர்
டிஎன்பிஎஸ்சி தேர்வு: இவர்களின் சிறப்புப் பெயர்கள் உங்களுக்குத் தெரியுமா? 

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுகளுக்கான வினா-விடை - 5-வது பதிவில் சான்றோர்களின் சிறப்புப் பெயர் பட்டியல் குறித்து பார்ப்போம்.

1. தெய்வப்புலவர், செந்நாப் போதார், பொய்யில் புலவர், நான்முகனார், நாயனார், தேவர், முதற்பாவலர், மாதானுபங்கி, பெருநாவலர் - திருவள்ளுவர்
2. தம்பிரான் தோழர், வன்தொண்டன் - சுந்தரர்
3. தமிழ் மூதாட்டி, அருந்தமிழ்ச் செல்வி - ஒளவையார்
4. புலனழுக்கற்ற அந்தணன், விவிரித்த கேள்வி விளங்கு புகழ்புலவர், குறிஞ்சிக்கவி - கபிலர்
5. மாத முனிவன், மாமுன், தமிழ்முனி, குறுமுனி, திருமுனி, முதல் சித்தர் - அகத்தியர்
6. வரலாற்றுப் புலவர் - பரணர்
7. இலக்கியச் சிங்கம் - நக்கீரன்
8. அரசத் துறவி - இளங்கோவடிகள்
9. அம்மை - காரைக்காலம்மையார்
10. காப்பியனார் - தொல்காப்பியனார்

11. சாத்தன் - சீத்தலைச் சாத்தனார்
12. இன்தமிழ் ஏசுநாதர், சம்மந்தர் - திருஞானசம்பந்தர்
13. கவிமணி - தேசிய விநாயகம் பிள்ளை
14. அப்பர் - திருநாவுக்கரசர்
15. தென்னவன் பிரம்மராயன், திருவாதவூரார், வாதவூரடிகள், ஆளுடைய பிள்ளை - மாணிக்கவாசகர்
16. தற்கால இலக்கியத்தின் விடிவெள்ளி, புதுக்கவிதையின் தந்தை, விடுதலைக்கவி, உணர்ச்சிக்கவி, தேசியக் கவி, பாட்டுக்கொரு புலவன், சிந்துக்குத் தந்தை, புதுமைக்கவி, மகாகவி, நீடுதுயில் நீக்கப்பாடி வந்த நிலை - பாரதியார்
17. கவிச்சக்கரவர்த்தி, விருத்தக்கவி - கம்பர் (கம்பரைப் புகழ்நதவர் சடையப்ப வள்ளல்)
18. சூடிக்கொடுத்த சுடர்கொடி, பாவை நாச்சியார் - ஆண்டாள்
19. தமிழ்வியாசர் - நம்பியாண்டார் நம்பி
20. அருண்மொழித் தேவர் - சேக்கிழார்

21. பட்டர்பிரான் - பெரியாழ்வார்
22. வெண்பாப்புலவர் - புகழேந்தி
23. தமிழ்த் தென்றல் - திரு.வி.கல்யாண சுந்தரனார்
24. உவமைக்கவிஞர் - சுரதா
25. புரட்சிக் கவிஞர், புரட்சிக்கவி, பாவேந்தர், புதுமைக்கவிஞர், இயற்கை கவிஞர், பூங்காட்டுத் தம்பி, கனகசுப்புரத்தினம், தமிழ் நாட்டின் ரசூல் கம்சத் தேவ் - பாரதிதாசன் 
26. நாமக்கல் கவிஞர், காந்தியக் கவிஞர் - வெ.இராமலிங்கம் பிள்ளை
27. பரணிப்புலவர் - ஜெயங்கொண்டார்
28. ஆசுகவி - காளமேகப்புலவர்
29. சந்தக்கவி - அருணகிரிநாதர்
30. சன்மார்க்க கவி, வள்ளலார் - இராமலிங்க அடிகளார்

31. திருமங்கை மன்னன் - திமங்கையாழ்வார்
32. கவியரசு - கண்ணதாசன்
33. மகாவித்துவான் - மீனாட்சி சுந்தரம் பிள்ளை
34. சிறுகதை மன்னன்- ஜெயகாநாதன், புதுமைப்பித்தன்
35. சுஜாதா - இரங்கராஜன்
36. தமிழ் அண்ணல் - டாக்டர் இராமபெரியகருப்பன்
37. கிறிஸ்துவக் கம்பன் - எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை. இவர் இரட்சண்ய யாத்திரிகம் எனும் நூலின் ஆசிரியர். இந்நூல் பில்க்ரிம்ஸ் பிரோகிரஸ் எனும் ஆங்கில நூலின் தழுவலாகும்)
38. பதிப்புச் செம்மல் - ஆறுமுக நாவலர்
39. சொல்லின் செல்வர் - ரா.பி.சேதுப்பிள்ளை
40. மொழி ஞாயிறு - தெய்வநேயப் பாவாணர்

41. தத்துவக் கவிஞர் - திருமூலர்
42. கர்ம வீரர், கறுப்பு காந்தி, கல்வி கண் திறந்தவர், கிங் மேக்கர், படிக்காத மேதை - காமராசர்
43. அண்ணல், மகாத்மா, தேசப்பிதா - காந்தியடிகள்
44. தமிழர் தந்தை - சி.பா. ஆதித்தனார்
45. தமிழ்நாட்டின் வால்டர்ஸ்காட், தமிழ் வரலாற்று நாவலின் தந்தை - கல்கி
46. தனித்தமிழ் இசைக்காவலர் - இராஜா அண்ணாமலைச் செட்டியார்
47. சந்தக்கவி - அருணகிரிநாதர்
48 - ரசிகமணி - டி.கே.சி
49. தனித்தமிழ் இயக்கத் தந்தை - மறைமலையடிகள்
50. தமிழ்த் தாத்தா- உ.வே.சாமிநாத ஐயர் -இயர் பெயர் வேங்கடரத்தினம். இவருக்கு சாமிநாதன் என்ற பெயரை வைத்தவர் மீனாட்சி சுந்தரம்பிள்ளை. இவரே உ.வே.சு.வின் ஆசிரியர். இவர் வாழ்க்கை வரலாறின் பெயர் என் சரிதம்

51. இராஜாஜி, மூதறிஞர் -  இராஜகோபாலாச்சாரி
52. கவிக்குயில் - சரோஜினி நாயுடு
53. சிற்பி - பாலசுப்பிரமணியன்
54. உவமைக்கவிஞர், சுரதா - சுப்புரத்தினதாசன். இயர்பெயர் இராசகோபாலன், பாரதிதாசன் மீது கொண்ட பற்று காரணமாகவே இவர் தம் பெயரை சுப்புரத்தின தாசன் என மாற்றிக்கொணாடார்.
55. தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த், தமிழ்நாட்டின் தாகூர், ரமி, கவிஞரேறு, பாவலர் மணி - வாணிதாசன்
56. கவியரசு - வைரமுத்து
57. நடமாடும் பல்கலைக்கழகம் - நெடுஞ்செழியன்
58. திராவிட சாஸ்திரி - சூரிய நாராயண சாஸ்திரிகள்
59. அழகிய மணவாளதாசர், திவ்வியகவி - பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
60. கவிராட்சசன் - ஓட்டக்கூத்தர்

61. உரையாசிரியர் - இளம்பூரணர்
62. பெருங்கவிக்கோ - பா.மு. சேதுராமன்
63. மீரா - மீ. ராஜேந்திரன்
64. தமிழ்மாணவர் - போப்பையர்
65. வீரமாமுனிவர் - கொன்ஸ்டான் ஜோசப் பெஸ்கி
66. அறிஞர், பேரறிஞர், தென்னாட்டு பெர்னாட்ஷா - அண்ணாதுரை
67. புரட்சித் தலைவர் - எம்.ஜி.ராமச்சந்திரன்
68. கலைஞர் - மு.கருணாநிதி
69. வைக்கம் வீரர், பகுத்தறிவுப் பகலவன், தந்தை பெரியார், சுயமரியாதைச் சுடர், தெற்காசிய சாக்ரடீஸ், வெண்தாடி வேந்தர், சுயமரியாதைச் சுடர் - ஈ.வெ.இராமசாமி
70. இந்தியாவின் நைட்டிங்கேல் - சரோஜினி நாயுடு

71. இந்தியாவின் எடிசன் - ஜி.டி.நாயுடு (கோபால்சாமி துரைசாமி நாயுடு)
72. இந்தியாவின் முதிரிந்த மனிதர் - தாதாபாய் நவ்ரோஜி
73. இந்தியாவின் இரும்பு மனிதர், இந்தியாவின் பிஸ்மார்க் - வல்லபாய் படேல்
74. இந்தியாவின் விடிவெள்ளி - ராஜா ராம் மோகன் ராய்
75. ஆசிய ஜோதி, இந்தியாவின் ஆபரணம் - நேரு
76. இந்தியாவின் கிளி - அமிர்குஸ்ரு
77. இந்தியாவின் தேச பந்து - சி.ஆர்.தாஸ்
78. இந்தியாவின் பங்க பந்து - முஜிபூர் ரஹமான்
79. இந்திய வானசாஸ்த்திரத்தின் தந்தை - ஆரியப்பட்டர்
80. பஞ்சாப் சிங்கம் - வாலா லஜபதிராய்

81. மராத்திய சிங்கம் - சிவாஜி
82. லோகமான்யர் - பாலகங்காதர திலகர்
83. பீமாராவ் ராம்ஜி - அம்பேத்கர்
84. இந்து சமயத்தின் மார்ட்டின் லூதர் - தயானந்த சரஸ்வதி
85. தமிழ்நாட்டின் மாப்பசான் - ஜெயகாந்தன்
86. பாவலர் ஏறு - பெருஞ்சித்தரனார்
87. இந்தியாவின் ஷேக்ஸ்பியர் - காளிதாசர்
89. தென்னாட்டு தாகூர் - அ.கி.வேங்கடரமணி
90. தென்னாட்டின் ஜான்சிராணி - கடலூர் அஞ்சலையம்மாள்
91. கவிக்கோ - அப்துல் ரஹமான்
92. தமிழ்நாட்டின் பெர்னாட்ஷா, உலகம் சுற்றிய முதல் தமிழ் அறிஞர் - மு.வரதராசன்
93. தற்கால உரைநடையின் தந்தை - ஆறுமுக நாவலர்
94. தனித்தமிழ் இலக்கியத்தின் தந்தை - மறைமலை அடிகள்
95. தமிழ்நாட்டின் ஜென் ஆஸ்டின் - அநுத்தமா
96. தமிழ்நாட்டின் ஜேம்ஸ் ஹாட்லி - சுஜதா . இவரது இயர்பெயர் எஸ்.ரங்கராஜன்.
97. தமிழகத்தின் அன்னிபெசண்ட்  - மூவலூர் இராமாமிர்தம் அம்மையார். அவ்வாறு அழைத்தவர் காந்தியடிகள்.
98. தென்னாட்டு போஸ் - முத்துராமலிங்க தேவர்
99. தென்னாட்டு திலகர், செக்கிழுத்த  செம்மல், கப்பல் ஓட்டிய தமிழன், வ.உ.சி - வ.உ.சிதம்பரனார்.
100. பகுத்தறிவுக் கவிராயர் - உடுமலை நாரயணகவி

101. சிலம்புச் செல்வர் - மா.பெ.சிவஞானம்
102. அரசியலின் சொல்லின் செல்வர் -ஈ.வே.கி.சம்பத்
103. இலக்கியத்தின் சொல்லின் செல்வர் - இரா.பி.சேதுப்பிள்ளை
104. சொல்லின் செல்வன் - அனுமன்
105. முத்தமிழ் காவலர் - கி.ஆ.பெ. விஸ்வநாதம்
106. தமிழ் தென்றல் - திரு.வி.கல்யாண சுந்தரனார் (திருவாரூர் விருத்தாச்சலம் கல்யாண சுந்தரனார்)
107. குழந்தைக் கவிஞர் - அழ.வள்ளியப்பா
108. இயற்கைக் கவிஞர் - வில்லியம் வொர்ட்ஸ்வொர்த்
109. மக்கள் கவிஞர் - பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார்
110. கரந்தைக் கவிஞர் - வேங்கடாஜலம் பிள்ளை

111. நாமக்கல் கவிஞர், காந்தியக்கவிஞர், ஆஸ்தான கவிஞர், ஆட்சி மொழிக்காவலர், முதல் அரசவைக் கவிஞர் - வெ.ராமலிங்கம்பிள்ளை
112. திருவருட்பிரகாச வள்ளலார் - இராமலிங்க அடிகளார்
113. திவ்ய கவி, தெய்வகவி, அழகிய மாணவாளதாசர் - பிள்ளைபெருமாள் ஐயங்கார்
114. கவியரசு - முடியரசன் - இயற்பெயர் துரைராசு
115. நாடகத்தந்தை - பம்மல் சம்மந்த முதலியார்
116. தமிழ்நாடக தலைமை ஆசிரியர், நாடக உலகின் இமயமலை - சங்கரதாஸ் சாமிகள்
117. தமிழ் நாடக மறுமலர்ச்சி தந்தை - கந்தசாமி
118. சிறுகதை மன்னன், புதுமைப் பித்தன் - சொ.விருத்தாசலம்
119. சிறுகதையின் முன்னோடி - வ.வே.சு.ஐயர்
120. புதுக்கவிதையின் பிதாமகன் - நா.பிச்சமூர்த்தி

121. இசைக்குயில் - எம்.எஸ்.சுப்புலட்சுமி
122. திரை இசைத் திலகம் - மருதகாசி
123. ஏழிசை மன்னர் - தியாகராஜ பாகவதர்
124. முத்தையா - கண்ணதாசன் (சேரமான் காதலி என்ற புதினத்திற்கு சாகித்ய அகடாமி பரிசு பெற்றவர்)
125. கவிராட்சன் - ஒட்டக்கூத்தர்
126. ரசிகமணி - டி.கே.சிதம்பரநாத முதலியார்
127. பண்டித மணி - மு.கதிரேச செட்டியார்
128. நவீனக் கம்பர் - மீனாட்சி சுந்தரனார்
129. அமுது அடியடந்த அன்பர், திருவாதவூரர், ஆளுடை அடிகள் - மாணிக்கவாசகர் (சைவ சமயக்குரவரர் நால்வரில் ஒருவர்)
129. திராவிட சிசு, ஆளுடைப்பிள்ளை - திருஞானசம்பந்தர்
130. அப்பர், வாசீகர், தருமசேனர், மருள்நீக்கியார், ஆளுடை அரசு - திருநாவுக்கரசர்

131. பொதிகை முனி - அகத்தியர்
132. நாவலர் - சோமசுந்தர பாரதியார்
133. கவியோகி - சுத்தானந்த பாரதியார்
134. பரிதிமாற்கலைஞர், தமிழ் நாடகப் பேராசிரியர் - சூரிய நாராயண சாஸ்திரி
135. தமிழ் மாணவர் - ஜி.யூ.போப் (ஜியார்ஜ் யூக்ளோ போப், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர். நாலடியாரை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்)
136. கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி - வீரமாமுனிவர். (இவர் இத்தாலி நாட்டில் பிறந்தவர். இவருக்கு தமிழ் கற்றுத் தந்தவர் மதுரை சுப்பிரமணியன்)
137. திராவிட ஒப்பிலக்கணத் தந்தை - கார்டுவெல்
138. இரட்டைப் புலவர்கள் - இளஞ்சூரியர், முதுசூரியர்
139. இலக்கண தாத்தா - மே.வி.வேணுகோபால்
140. மைசூர் புலி - திப்புசுல்தான்

141. மாதர்குல மாணிக்கம் - முத்துலட்சுமி ரெட்டி (அவ்வை இல்லத்தை உருவாக்கியவர்)
142. வைணவம் தந்த செல்வி, சூடிக்கொடுத்த சுடர்கொடி - ஆண்டாள்
143. சுல்தான் அப்துல் காதர் - குணங்குடி மஸ்தான்
144. மே தினம் கண்டவர் - சிங்கார வேலனார்
145. காந்தியடியின் தத்தெடுக்கப்பட்ட மகள் எனப் பெயர் பெற்றவர் - அம்புஜத்தமாள்

தொடரும்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com