பட்டதாரிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கியில் 623 உதவியாளர் வேலைக்கு விண்ணப்பிக்க அழைப்பு!

வங்கிகளின் தலைமை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியில் 2017-2018-ஆம் ஆண்டிற்கான 623 உதவியாளர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பு
பட்டதாரிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கியில் 623 உதவியாளர் வேலைக்கு விண்ணப்பிக்க அழைப்பு!

வங்கிகளின் தலைமை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியில் 2017-2018-ஆம் ஆண்டிற்கான 623 உதவியாளர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 623 (இதில் சென்னைக்கு 15 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன)

பணி: Assistant
காலியிடங்கள் விவரம்:
1. Ahmedabad - 19
2. Bengaluru - 25
3. Bhopal - 25
4. Bhubaneswar - 17
5. Chandigarh - 13
6. Chennai - 15
7. Guwahati - 36
8. Hyderabad - 16
9. Jaipur - 13
10. Jammu - 23
11. Kanpur & Lucknow - 44
15. Kolkata - 23
16. Mumbai - 264 - 15
17. New Delhi - 47
18. Patna - 15
19. Thiruvananthapuram & Kochi - 13

தகுதி: 01.10.2017 தேதியின்படி ஏதாவதொரு துறையில் 50 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 20 - 28க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.13.150 - 34,990

தேர்வு செய்யப்படும் முறை: முதற்கட்ட தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் மொழி ஆளுமைத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:  www.rbi.org.in அல்லது www.opportunities.rbi.org.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்:  பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.450. மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.50 கட்டணமாக செலுத்த வேண்டும். இதனை வங்கி அட்டைகள் மற்றும் ஆன்லைன் மூலமும் செலுத்தலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.11.2017

தேர்வு நடைபெறும் தேதி: நவம்பர் 27 மற்றும் 28 தேதிகளில் நடைபெறும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/ADVT8E5DE08695784EAA813D96BE27F50A3B.PDF என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com