சட்டம் படித்தவர்களுக்கு பாரத ஸ்டேட் வங்கியில் துணை மேலாளர் வேலை

பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 41 துணை மேலாளர், துணை பொது மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சட்டம் படித்தவர்களுக்கு பாரத ஸ்டேட் வங்கியில் துணை மேலாளர் வேலை

பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 41 துணை மேலாளர், துணை பொது மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து அக்டோபர் 6 ஆம் தேதிக்குள் ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Deputy Manager (Law) - 40
வயதுவரம்பு: 01.09.2017 தேதியின்படி 25 முதல் 35க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.31,705 - 45,950

பணி: Deputy General Manager (Law) - 01
வயதுவரம்பு: 35 - 40க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.68,680 - 76520

தகுதி: சட்டத்துறையில் பட்டம் பெற்று வழக்கறிஞர் மற்றும் பார் கவுன்சிலில் பதிவு செய்து சட்டப்பூர்வமான வணிக வங்கிகள், நிதி நிறுவனங்களின் சட்டத் துறையின் சட்ட அலுவலர் அல்லது மாநில நிலையிலான மேம்பாட்டு நிதி நிறுவனங்கள் பணிபுரிந்திருந்த பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600 மற்ற பிரிவினர் ரூ.100 கட்டணமா செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.sbi.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

“State Bank of India,
Central Recruitment & Promotion Department,
Corporate Centre, 3rd floor, Atlanta Building,
Nariman Point, Mumbai-400021”

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.10.2017

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 10.10.2017

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 11.11.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.sbi.co.in/webfiles/uploads/files/1505222326514_CRPD_SCO_LAW2017_18.pdf  என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com