விண்ணப்பித்துவிட்டீர்களா..? வேலை...வேலை...வேலை...

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் தொழில்நுட்பத் தகுதியாக,  சுருக்கெழுத்து- தட்டச்சு ஆங்கிலம் மற்றும் தமிழில்
விண்ணப்பித்துவிட்டீர்களா..? வேலை...வேலை...வேலை...

ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தில் வேலை
பணி:  Coordination Associate  
தகுதி:  பின்வரும் பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் (பிரிவுகள்:  social sciences, public policy, administration,
communication, management, or other related areas in social development) அத்துடன் குறைந்த பட்சம் மூன்று ஆண்டுகள் துறை சார்ந்த பணி அனுபவம்
பெற்றிருக்க வேண்டும்.  ஆங்கிலம் - ஹிந்தி மொழிகளில் புலமை உடையவராக இருக்கவேண்டும்.   மாற்றுத் திறனாளிகளுக்கு சேவை புரிந்த தன்னார்வலர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: https://info.undp.org/erecruit/documents/How%20to%20Apply.pdf என்ற இணையதளத்தில் தரப்பட்டுள்ள வழிமுறைகளின்படி, ஆன்லைனில் விண்ணப் பிக்க வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை:  உடல் திறன் தேர்வு, கணினித் திறன் தேர்வு போன்ற தேர்வுகள் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு: http://www.in.undp.org/content/india/en/home/operations/careers/ என்ற இணைய தளத்தைப் பாருங்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி:  
28 .09.2017

நேஷனல் டெக்ஸ்டைல் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை
பணி:  Management Trainee (பிரிவுகள்: Textile, Finance)
தகுதி: Textile பிரிவுக்கு Textile Engineering & Fibre Science  பிரிவில் முழுநேர பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  Finance பிரிவுக்கு CA/CMA  
படிப்பில் தேர்ச்சி  பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு:   30 வயதுக்குள் இருக்கவேண்டும்.  
விண்ணப்பக் கட்டணம்:  ரூ.300/-
விண்ணப்பிக்கும் முறை: http://www.ntcltd.org என்ற இணையதளத்தில் தரப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த
விண்ணப்பத்தை பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் மற்றும் தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் இணைத்து கீழ்க்காணும் முகவரிக்கு  சாதாரண தபாலில் மட்டுமே அனுப்பி வைக்க வேண்டும்.
முகவரி: National Textile Corporation Ltd, Post Bag No: 7 (Seven), Lodhi  Road Head Post Office, New Delhi, Pin 110003
தேர்வு செய்யப்படும் முறை:  Textile பிரிவுக்கு GATE -2017 தேர்வு, Finance பிரிவுக்கு CA/ICWA தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில்  தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு: http://ntcltd.org/Writereaddata/Downloads/Detailed%20Advertisement.pdf என்ற இணையதளத்தைப் பாருங்கள். 
விண்ணப்பங்கள் சென்று சேரக் கடைசித் தேதி:  30.09.2017

திருவண்ணாமலை  மாவட்ட  நீதிமன்றத்தில் வேலை
பணி:  ஸ்டெனோகிராபர் (கிரேடு-3)
காலியிடங்கள்: 08
தகுதி:  பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் தொழில்நுட்பத் தகுதியாக,  சுருக்கெழுத்து- தட்டச்சு ஆங்கிலம் மற்றும் தமிழில் முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  
வயதுவரம்பு:   18 வயது முதல் 30 வயதுக்குள் இருக்கவேண்டும்   (குறிப்பிட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயதுவரம்பில் தளர்வு உண்டு)  
விண்ணப்பிக்கும் முறை: http://indiajobvacancy.com/wp-content/uploads/2017/09/Tiruvannamalai-District-Court-Recruitment-2017-08-Stenographer-
Posts.pdf என்ற இணைய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி  விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, புகைப்படம் மற்றும் தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் இணைத்து கீழ்க்காணும் முகவரிக்கு  பதிவுத் தபால்  மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.
முகவரி:  க.மகிழேந்தி, மாவட்ட  நீதிபதி,
திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணா மலை- 606604.
தேர்வு செய்யப்படும் முறை:  எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் மூலம்  தகுதியான நபர்கள் தேர்வு செய்யப் படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு: http://indiajobvacancy.com/wp-content/uploads/2017/09/Tiruvannamalai-District-Court-Recruitment-2017-08-Stenographer-
Posts.pdf என்ற இணைய தளத்தைப் பாருங்கள். 
விண்ணப்பங்கள் சென்று சேரக் கடைசித் தேதி:  03.10.2017

புதுச்சேரி அரசு குடும்ப நலத்துறையில் வேலை
பணி: Staff Nurse 
காலியிடங்கள்: 55
தகுதி:  +2  படிப்பில்  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் B.Sc.(Nursing) பிரிவில் பட்டப்படிப்பு அல்லது General Nursing & Midwifery / Psychiatric
Nursing பிரிவு அல்லது அதற்கு இணையான பிரிவில்  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  நர்சிங் கவுன்சில் ஆஃப் இந்தியாவில் பதிவு செய்திருக்க வேண்டும். 
வயதுவரம்பு:   18 வயது முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.  (குறிப்பிட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயதுவரம்பில் தளர்வு உண்டு).
விண்ணப்பிக்கும் முறை: http://health.puducherry.gov.in என்ற இணையதளத்தில் உள்ள  விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த
விண்ணப்பத்தைத் தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் இணைத்து கீழ்க்காணும் முகவரிக்கு Registered Post with Acknowledgement Due முறையில்  
அனுப்பி வைக்க வேண்டும். 
முகவரி: The Director, Directorate of Health & Family Welfare Services, Victor Simmonel Street, Old Maternity Hospital Building, Puducherry - 605001
தேர்வு செய்யப்படும் முறை:  எழுத்துத் தேர்வு மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
மேலும் விவரங்களுக்கு: http://health.puducherry.gov.in/Recruitment2017/StaffNurseRec/InformationToCandidate.pdf என்ற இணையதளத்தைப்  பாருங்கள். 
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி:  03.10.2017
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com