விண்ணப்பித்துவிட்டீர்களா..? இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை

இந்திய எண்ணெய் கழக நிறுவனமான ஐ.ஓ.சி.எல்-யின் தெற்கு மண்டல கிளையில் காலியாக உள்ள நான்-எக்சிகியூட்டிவ் அதிகாரி பணியிடங்களுக்கான
விண்ணப்பித்துவிட்டீர்களா..? இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை

இந்திய எண்ணெய் கழக நிறுவனமான ஐ.ஓ.சி.எல்-யின் தெற்கு மண்டல கிளையில் காலியாக உள்ள நான்-எக்சிகியூட்டிவ் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 98 

பணி: ஜூனியர் ஆபரேட்டர் -51 

பணி: ஜூனியர் ஆபரேட்டர் (ஏவியேசன்) - 46 

பணி: ஜூனியர் ஜார்ஜ்மேன் - 01 இந்த பணியிடங்கள் அனைத்தும் தமிழகம், கேரளா, புதுச்சேரி, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்களுக்கானதாகும்.

வயது வரம்பு: 18 முதல் 26க்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக், இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக், எலக்ட்ரீசியன், மெஷினிஸ்ட், பிட்டர் போன்ற பிரிவில் 2 ஆண்டு ஐடிஐ முடித்தவர்கள் ஜூனியர் ஆபரேட்டர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். பிளஸ்-2 படிப்புடன், கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள் ஜூனியர் ஆபரேட்டர் ஏவியேசன் பணிக்கு விண்ணப்பிக்கலாம், பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேசன், சிவில், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் போன்ற பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள் ஜூனியர் ஜார்ஜ்மேன் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் பணித்திறன் தேர்வுகள் சோதிக்கப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.150. 

விண்ணப்பிக்கும் முறை: www.iocl.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.2.2018

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 16.2.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய மேற்கண்ட இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள் அறிவிப்பை படித்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com