தேசிய மறுவாழ்வு மையத்தில் வேலை: 19க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு

மத்திய சமூக நலத்துறை அமைச்சகத்தின் கீழ் கட்டாக்கில் செயல்பட்டு வரும் தேசிய மறுவாழ்வு ஆராய்ச்சி மற்றும் பயிற்சி

மத்திய சமூக நலத்துறை அமைச்சகத்தின் கீழ் கட்டாக்கில் செயல்பட்டு வரும் தேசிய மறுவாழ்வு ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தில் காலியாக பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 19-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Anaesthetist - 01
பணி: Lecturer - 01
பணி: Accountant - 01
பணி: Junior Engineer (E&M) - 01
பணி: Typist/Clerk(Hind & English) - 04

தகுதி: Anaesthesiology பிரிவில் எம்.எஸ் பட்டம், எம்பிபிஎஸ், Commerce, Chartered, Cost Accountant, Electrical engineering, +2 தேர்ச்சியுடன் ஆங்கிலம், ஹிந்தியில் தட்டச்சு திறன் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, கல்வித்தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் மற்றும் பணி அனுபவம் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.svnirtar.com என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் சுய சான்று செய்யப்பட்ட புகைப்படம் மற்றும் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து கீழ் வரும் அஞ்சல் முகவரிக்கு அஞ்சலில் அனுப்ப வேண்டும்.

The Director, Swami Vivekanand National Institute of Rehabilitation Training and Research, Olatour, Post: Bairoi, District: Cuttack, Odisha, Pin:754 010.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 19.01.2018

மேலும் விவரங்கள் அறிய www.svnirtar.com என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com