ஐடிஐ, எம்எல்டி, பார்மசிஸ்ட் முடித்தவர்களா நீங்கள்... அழைக்கிறது நெய்வேலி என்எல்சி 

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி (என்எல்சி) நிறுவனத்தில் அளிக்கப்பட உள்ள தொழில்பழகுநர் பயிற்சிக்கான
ஐடிஐ, எம்எல்டி, பார்மசிஸ்ட் முடித்தவர்களா நீங்கள்... அழைக்கிறது நெய்வேலி என்எல்சி 

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி (என்எல்சி) நிறுவனத்தில் அளிக்கப்பட உள்ள தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த பயிற்சி இடங்கள்: 90

பயிற்சி இடம்: நெய்வேலி

துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 
1. Fitter fresher - 20 
2. Electrician fresher - 20 
3. Welder fresher - 20 
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். 

4. MLT. Pathology fresher - 10 
5. MLT. Radiology fresher - 05 
தகுதி: இயற்பியல், வேதியியல், உயிரியியல் பாடங்கள் கொண்ட பிரிவில் பிளஸ் டூ தேர்ச்சி பெற்று சம்மந்தப்பட்ட பிரிவில் எம்எல்டி முடித்திருக்க வேண்டும். 

6. Technician Apprentice (Pharmacist) - 15 
தகுதி: 55 சதவீத மதிப்பெண்களுடன் மருந்தியியல் துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

தமிழ்நாடு மற்றும் பதுச்சேரி மாநிலத்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை: நாளை புதன்கிழமை (ஜூலை 4) மாலை 5 மணிக்குள் www.nlcindia.com என்ற இணையதளத்தில் ON LINE REGISTRATION FORM-ல் பூர்த்தி செய்து விண்ணப்படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ள வேண்டும்.

கையொப்பமிடப்பட்ட விண்ணப்பத்துடன் மதிப்பெண் பட்டியல், மாற்றுச்சான்றிதழ், சாதிசான்றிதழ், கல்வித்தகுதி சான்றிதழ், முன்னாள் ராணுவ வீரரின் வாரிசு அல்லது மாற்றுத்திறனாளிகளாக இருந்தால் அவற்றின் நகல்களை இணைத்து வரும் 9.7.2018 அன்று மாலை 5 மணிக்குள் அஞ்சல் மூலம் கீழ்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

துணை பொதுமேலாளர், 
கற்றல் மற்றும் மேம்பாட்டு மையம்,
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்,
வட்டம்- 20, நெய்வேலி - 607803

பயிற்சிக்கும் தேர்வுசெய்யப்பட்டவர்கள் பட்டியல் www.nlcindia.com என்ற அதிகாரப்பூர்வ இணையத்தில் ஆகஸ்ட் 8-ஆம் தேதி வெளியிடப்படும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.nlcindia.com/new_website/careers/FRESHER-NET%20Advt_No_L&DC_012018.pdf என்ற லிங்கை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com