வேலை வேண்டுமா..? திருச்சி ஆவின் அழைப்பு உங்களுக்கு தான்!

திருச்சி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் (ஆவின்) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம்ருந்து
வேலை வேண்டுமா..? திருச்சி ஆவின் அழைப்பு உங்களுக்கு தான்!

திருச்சி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் (ஆவின்) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம்ருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பதவி: டெக்னிஷியன் (ஆப்பரேஷன்)
காலியிடம்: 1 (எஸ்.சி-மகளிர்)
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், ரெஃப்ரிஜிரேஷன்/ ஏர் கண்டிஷனரிங்/ ஃபிட்டர்/ டைரி மெக்கானிக்/ எலெக்ட்ரீசியன்/ வயர்மேன்/ இன்ஸ்ட்ரூமென்டேஷன் பிரிவுகளில் ஐ.டி.ஐ. அல்லது மெக்கானிக்கல்/ எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்/ இன்ஸ்ட்ரூமெண்டேஷன்/கண்ட்ரோல் இன்ஜினியரிங் பிரிவுகளில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பதவி: டெக்னிஷியன் (ரெஃப்ரிஜிரேஷன்)
காலியிடம்: 1
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், ரெஃப்ரிஜிரேஷன்/ ஏர் கண்டிஷன் மெக்கானிக் பிரிவுகளில் ஐ.டி.ஐ. அல்லது மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பதவி: டெக்னிஷியன் (எலெக்ட்ரிஷியன்)
காலியிடங்கள்: 4
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், எலெக்ட்ரீசியன்/ லைன்மேன்/ ஒயர்மேன் பிரிவுகளில் ஐ.டி.ஐ. அல்லது எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பதவி: சீனியர் ஃபேக்டரி அசிஸ்டெண்ட் 
காலியிடங்கள்: 32
கல்வித் தகுதி: பிளஸ் டூ தேர்ச்சியுடன் ஏதேனும் ஒரு பிரிவில் ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 வயதிலிருந்து 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.aavinmilk.com என்ற இணையதளத்திலிருக்கும் விண்ணப்ப மாதிரி படிவத்தின்படி விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்க்காணும் முகவரிக்கு பதிவு தபால் அல்லது விரைவு தபால் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும்.
முகவரி: The General Manager, Tiruchirappalli District Cooperative Milk Producer's Union Ltd, Pudukkottai Road, Kottapattu, Tiruchirappalli-620023. 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 16.03.2018 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.aavinmilk.com/hrtry120218.html என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com