வேலை வேண்டுமா...? மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் வேலை 

மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் 2018-2019-ஆம் ஆண்டிற்கான 447 கான்ஸ்டபிள் டிரைவர், கான்ஸ்டபிள்(டிரைவர் மற்றும் பம்ப் ஆப்ரேட்டர்)
வேலை வேண்டுமா...? மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் வேலை 

மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் 2018-2019-ஆம் ஆண்டிற்கான 447 கான்ஸ்டபிள் டிரைவர், கான்ஸ்டபிள்(டிரைவர் மற்றும் பம்ப் ஆப்ரேட்டர்) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடமிருந்து வரும் 19-ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 447

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
1. Constable/Driver - Direct - 344 
2. Constable/ (Driver-Cum-Pump -Operator) - 103

தகுதி: பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியுடன் மோட்டார் வாகனச் சட்டம் 1988-ன்படி இலகுரக, கனரக வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் கியர் உள்ள மோட்டார் சைக்கிள் ஒட்டத்தெரிந்த்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 19.03.2018 தேதியின்படி 21 முதல் 27க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

சம்பளம்: மாதம் ரூ.21,700 - 69,100 வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, பிஇடி, பிஎஸ்டி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு, துறைவாரி தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. மற்ற் ்னைத்து பிரிவினருக்கும் கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ள இளைஞர்கள் ww.cisfrectt.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.03.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://images.dinamani.com/uploads/user/resources/pdf/2018/3/12/Click-Here-for-CISF-Constable-Driver-Syllabus-PDF-Download.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com