விண்ணப்பத்துவிட்டீர்களா..?: பட்டதாரிகளுக்கு கடலோர காவல்படையில் உதவி கமாண்டன்ட் வேலை

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்தியன் கோஸ்ட் கார்டு எனப்படும் இந்திய கடலோர காவல்படையில்
விண்ணப்பத்துவிட்டீர்களா..?: பட்டதாரிகளுக்கு கடலோர காவல்படையில் உதவி கமாண்டன்ட் வேலை

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்தியன் கோஸ்ட் கார்டு எனப்படும் இந்திய கடலோர காவல்படையில் காலியாக உள்ள குரூப்-ஏ பிரிவின் கீழ் வரும் கெசட்டடு அதிகாரிகள் தரத்திலான உதவி கமாண்டன்ட் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜெனரல் டியூட்டி, ஜெனரல் டியூட்டி பைலட், கமர்சியல் பைலட் போன்ற பிரிவில் உள்ள பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடியுரிமை பெற்ற மணமாகாத இருபாலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றவர்கள் ஜெனரல் டியூட்டி (ஆண்-பெண்) மற்றும் ஜெனரல் டியூட்டி பைலட் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இவர்கள் பிளஸ் டூ படிப்பில் கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்கள் அடங்கிய பிரிவை தேர்வு செய்து படித்திருக்க வேண்டும். 

பிளஸ் டூ படிப்பில் இயற்பியல் மற்றும் கணித பாடத்தில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள், கமர்சியல் பைலட் லைசென்சு பெற்றவர்கள் பைலட் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு: ஜெனரல் டியூட்டி (ஆண் - பெண்) பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.07.1994 மற்றும் 30.06.1998 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். ஜெனரல் டியூட்டி பைலட், மற்றும் கமர்சியல்பைலட் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.07.1994 மற்றும் 30.06.2000 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: நுண்ணறிவுத் திறன் தேர்வுகள், உளவியல் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு, மருத்துவ தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: http://www.joinindiancoastguard.gov.in  என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.06.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.joinindiancoastguard.gov.in  என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்புக்கான லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com