பட்டதாரிகளுக்கு விமான சரக்கு பெட்டக நிறுவனத்தில் வேலை

இந்திய விமான ஆணைய நிறுவனத்தின் கீழ் செயல்படும் துணை நிறுவனங்களில் ஒன்றான ஏஏஐ கிளாஸ் நிறுவனத்தில்
பட்டதாரிகளுக்கு விமான சரக்கு பெட்டக நிறுவனத்தில் வேலை


இந்திய விமான ஆணைய நிறுவனத்தின் கீழ் செயல்படும் துணை நிறுவனங்களில் ஒன்றான ஏஏஐ கிளாஸ் நிறுவனத்தில் ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 372 Security Screeners  பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் இடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பதவி: Security Screeners

காலியிடங்கள்: 372

ஒவ்வொரு விமான தளங்களிலும் உள்ள காலியிடங்கள் விவரம்:
1. Madurai - 32
2. Tirupati  - 20
3. Raipur  - 20
4. Udaipur  - 20
5. Ranchi  - 20
6. Vadodara - 20
7. Indore - 38
8. Amritsar - 52
9. Mangalore - 38
10. Bhubaneswar - 38
11. Agartala - 22
12. Port Blair - 22
13. Chandigarh - 30

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். அத்துடன் என்.சி.சி. சான்றிதழ் அல்லது விமான நிறுவனத்தின் ஏவி.எஸ்.இ.சி. சான்றிதழ் பெற்றிருப்பதுடன் இந்தி, ஆங்கிலம் மொழி அறிவுடன் உள்ளூர் மொழியும் தெரிந்திருக்க வேண்டும்.  

வயதுவரம்பு: 45 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஒரு சில பணியிடங்களுக்கு மட்டும் உடற்தகுதி, எழுத்துத் தேர்வும் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினர், பெண் விண்ணப்பதாரர்கள், முன்னாள் படைவீரர்கள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தபால் முலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் The Chief Executive Officer, AAI Cargo Logistics & Allied Services Company Limited, AAI Complex, Delhi Flying Club Road, Safdarjung Airport, New Delhi -110 003 என்ற முகவரிக்கு சென்றடைய வேண்டும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://aaiclas-ecom.org/images/career3.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

விண்ணப்பம் சென்றுசேர கடைசி தேதி: 15.12.2018

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com