ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத காவலர் சோதனைக்குப் பிறகே அனுமதி

ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவோர், காவலர் சோதனைக்குப் பிறகே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் கூறியுள்ளார்.

ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவோர், காவலர் சோதனைக்குப் பிறகே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் கூறியுள்ளார்.
ஆசிரியர் தேர்வு வாரியம் வரும் 29, 30 ஆகிய நாள்களில் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சென்னை மாவட்டத்தில் 29-ஆம் தேதி தாள்-1ஐ 27 மையங்களில் 10,147 தேர்வர்களும், 30-ஆம் தேதி 88 தேர்வு மையங்களில் தாள்-2ஐ 31,235 தேர்வர்களும் எழுத இருக்கின்றனர்.
காலை 8.30 மணிக்குள் வர வேண்டும்: ஒவ்வொருவரும் தேர்வு மையத்துக்கு காலை 8.30 மணிக்குள் வர வேண்டும். அதையடுத்து நுழைவு வாயிலில் காவலர் சோதனை காலை 8.30 மணி முதல் காலை 9.30 மணி வரையில் இருக்கும். நுழைவுச் சீட்டுடன் நீலம் அல்லது கருப்பு பந்துமுனைப் பேனா மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்படும்.
அதேபோல், எக்காரணம் கொண்டும் தேர்வு நேரத்தில் வெளியில் செல்வதற்கு அனுமதியில்லை. தேர்வு முடிந்ததும் ஓ.எம்.ஆர். விடைத்தாளின் பிரதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அச்சிட்ட அல்லது கையால் எழுதிய துண்டுச் சீட்டுகள் மற்றும் செல்லிடப்பேசி, மடிக்கணினி, கணக்கிடும் கருவிகள் தேர்வறைக்குள் அனுமதி கிடையாது. தேர்வறைக்குள் அறைக் கண்காணிப்பாளர், தேர்வர்கள் ஆகியோர் முறைகேடுகளில் ஈடுபட்டால் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேற்குறிப்பிட்ட அறிவுரைகளைக் கடைப்பிடிக்காத தேர்வர்கள் அன்றைய தேர்வு எழுத அனுமதிக்காததோடு, ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளைத் தொடர்ந்து எழுதவும் நிரந்தரத் தடை விதிப்பதுடன் காவல் துறை நடவடிக்கையும் எடுக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com